`இதையெல்லாம் செய்யுங்கள், உங்கள் குழந்தை சமத்தாகச் சாப்பிடும்!' - உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணன் | Simple way to make eat the children

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (05/04/2019)

கடைசி தொடர்பு:12:40 (05/04/2019)

`இதையெல்லாம் செய்யுங்கள், உங்கள் குழந்தை சமத்தாகச் சாப்பிடும்!' - உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணன்

குழந்தைகள்

குழந்தைகள் அடம்பிடிக்காமல் சமத்தாகச் சாப்பிட எளிய வழிமுறைகளைக் கூறுகிறார், உணவியல் நிபுணர், தாரிணி கிருஷ்ணன்.

* ``அடிக்கடித் தாங்கள் சாப்பிடுவதுடன், குழந்தைகளுக்கும் துரித உணவுகளைச் சாப்பிடப் பழக்கப்படுத்துவது பெற்றோர்கள்தாம். இந்த உணவுகளில், வெறும் கொழுப்புச்சத்து, மாவுச்சத்து மட்டுமேதாரிணி கிருஷ்ணன் இருக்கிறது. இவை குழந்தைகளின் வளர்ச்சிக்குக் கெடுதலாக அமையுமே தவிர, பயன்தராது. இத்தகைய உணவுகள் ஜீரணமாக அதிக நேரமெடுக்கும் என்பதால், குழந்தைகள் அடுத்த வேளையில் சரியாகச் சாப்பிட மாட்டார்கள்.

* சத்துகள் அதிகமிருக்கிறது என்றாலும், நட்ஸ் வகைகளைக் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கக் கூடாது. இவை ஜீரணமாக அதிக நேரமாகும். குறிப்பாக பாதாமை, வெறுமனே சாப்பிடக் கொடுக்காமல், நீரில் சிறிதுநேரம் ஊறவைத்துக் கொடுப்பதே சிறந்தது. 

* சரியான நேரத்துக்கு ஹோம்வொர்க் செய்து முடித்து, சராசரியாக எட்டு மணிநேர தூக்கத்தை குழந்தைகளுக்கு உறுதி செய்யுங்கள். சரியான தூக்கம், விளையாட்டு, பிடித்தமான செயல்பாடுகளில் கவனம் செலுத்தினால், குழந்தைகளின் உணவுச் செயல்பாடுகளும் சரியாகவே அமையும்.

குழந்தைகள்

* அதிகளவில் எண்ணெய் சேர்க்காமல் இருந்தால் வாரம் இருமுறையும், இல்லையெனில் வாரத்துக்கு ஒருமுறையும் அசைவ உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். முழு முட்டையெனில் ஒருநாள் விட்டு ஒருநாளும், முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் கொடுப்பதென்றால் தினமும் கொடுக்கலாம்.

* அடிக்கடி ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே குழந்தைகளுக்குப் பிடித்த ஆரோக்கியமான உணவுகளைச் சமைத்துக் கொடுங்கள்."