ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண் மற்றும் குழந்தையை மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும்! - உறவினர்கள் கோரிக்கை | Sattur hiv infected lady and her daughter safe

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (06/04/2019)

கடைசி தொடர்பு:07:17 (06/04/2019)

ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண் மற்றும் குழந்தையை மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும்! - உறவினர்கள் கோரிக்கை

ஹெச்.ஐ.வி., ரத்தத்தைத் தவறாக ஏற்றப்பட்ட தாயும், அவரின் குழந்தையும் நலமாக இருக்க வேண்டுவதாக அவரது உறவினர் தெரிவித்தனர்.

மருத்தவமனை

சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ரத்தச் சிவப்பு அணுக்கள் குறைபாட்டைப் போக்குவதற்காக ஏற்றப்பட்ட ரத்த தானத்தால், ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 பேர் குழு கொண்ட மருத்துவக் குழு நியமிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சை இருந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருக்குமா என சோதனைகள் நடத்தப்பட்டது. முதற்கட்ட அறிக்கையில் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என மருத்துவ அறிக்கை கிடைத்தது. தொடர் சிகிச்சையில் தாயும், குழந்தையும் உடல் நலத்தில் முன்னேற்றம் அடைந்துவருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், இருவரும் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் இருந்து பெண் மற்றும் குழந்தை இருவருமே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் இருவரையும் தொடர்ந்து அரசு மருத்துவமனை அவர்களின் நிலையைக் கவனிக்க உள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், ``மருத்துவமனையில் நல்ல சிகிச்சை கிடைத்தது. ஆனால், இதேபோல் இவர்களை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணிக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் இவர்களுக்காக கடவுளிடம் வேண்டிவருகிறோம். நல்ல உடல் நலத்துடன் இருக்க அரசு மருத்துவமனை தொடர்ந்து அவ்வப்போது இவர்களைக் கவனிக்க வேண்டும்'' என்றனர்.