`அப்பவே சொன்னேன் கேட்டீர்களா!’ - துரைமுருகனை கலாய்த்த விஜயகாந்த் மகன் | vijaya prabhakaran slams Durai Murugan at election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (06/04/2019)

கடைசி தொடர்பு:08:09 (06/04/2019)

`அப்பவே சொன்னேன் கேட்டீர்களா!’ - துரைமுருகனை கலாய்த்த விஜயகாந்த் மகன்

``ஸ்டாலின் ஒரு புகார் பெட்டி. எந்தத் திட்டமாக இருந்தாலும் அவர் எதிர்ப்பார். கேப்டனிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று அப்பவே சொன்னேன், கேட்டீர்களா... இப்ப உங்க நிலைமை என்ன?’’ என்று துரைமுருகனை கலாய்த்தார் விஜயகாந்த் மகன்.

ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, பிரசாரம் செய்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பிரசாரம் செய்தார். வேலூர் காகிதப்பட்டறையில் பேசிய விஜய பிரபாகரன், ``இந்த மாவட்டம் என்னுடைய அம்மாவின் சொந்த ஊர். இந்த மாவட்டத்தின் மருமகன் என்னுடைய அப்பா விஜயகாந்த். ஸ்டார் தொகுதியாக வேலூர் மாறியிருக்கிறது. ஏனென்றால், ஆட்சியில் இல்லாவிட்டாலும் பணம் மட்டும் மூட்டை மூட்டையாக ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கேப்டனை தொட்டால் செத்தார்கள்... என்று அப்பவே சொன்னேன். தேவையில்லாமல் துரைமுருகன் சீண்டிப் பார்த்தார். அதன் விளைவு, இப்போது என்ன ஆச்சி பார்த்தீர்களா? 

ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, பிரசாரம் செய்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்.

எங்கள் மடியில் கனமில்லை. அதனால் பயமில்லை. இந்த டைலாக்கை கேப்டன் சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஏ.சி.சண்முகம் ஒரு சிறந்த வேட்பாளர். அவர் மாணவர்களுடன் அதிகம் தொடர்புடையவர். நிச்சயமாக நல்லது செய்வார். 6 சட்டமன்றத் தொகுதியிலும் இலவசமாகத் திருமண மண்டபம் கட்டித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அதொரு வரப்பிரசாதம். மோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்திருக்கிறார். ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் எதிர்க்கிறார். அவர் ஒரு உளறும் புகார் பெட்டி என்று என்னுடைய அம்மா சொல்லியிருக்கிறார். மத்தியிலும், மாநிலத்திலும் நம்முடைய ஆட்சி இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கூட்டணி வைத்தால்தான் நமக்கு அமோக வெற்றி கிடைக்கும்’’ என்றார்.