``லண்டன்ல ஐ.டி வேலையில இருக்கேன்!" - ஜோதிட பலன் புகழ் வீஜே விஷால் | I am working in IT sector in London says vj vishal

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (06/04/2019)

கடைசி தொடர்பு:14:47 (06/04/2019)

``லண்டன்ல ஐ.டி வேலையில இருக்கேன்!" - ஜோதிட பலன் புகழ் வீஜே விஷால்

சன் டிவியில் 'ஜோதிடபலன்' நிகழ்ச்சியைப் பல வருஷங்களாகத் தொகுத்து வழங்கியவர் வீஜே விஷால். ஐ.டி வேலை பார்த்துக்கொண்டு, பகுதி நேரமாக மீடியாவில் வலம் வந்தவர். அவருடைய பணியின் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 'ஜோதிடபலன்' நிகழ்ச்சியிலிருந்து விலகினார். ஆங்கரிங், ஐ.டி வேலை என்றிருந்தவர் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் எனக் கேட்டோம்.

விஜே விஷால்

வேலையின் காரணமாக லண்டனில் மூன்று வருஷம் இருக்க வேண்டியதாக இருந்துச்சு. லண்டனில் இருந்து வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைமாக ஆங்கரிங் பண்ணலாம்னு டெஸ்ட் ஷூட் போயிருந்தேன். இப்போ வரை எந்த ரிசல்ட்டும் வரலை. மீடியா எனக்கு அதிகமாக ஃபேம் கொடுத்துச்சு. ஐ.டி கம்பெனி எனக்கான வளர்ச்சியைக் கொடுத்துச்சு. பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். எதுக்காகவும், யாருக்காகவும் என் ஐ.டி வேலையை விடக்கூடாது, விட மாட்டேன் என்பது என்னுடைய எண்ணம். இப்பவும் பல இடங்களில் என்னைப் பார்க்கிற என் ரசிகர்கள் ஆசையா விசாரிக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. பல நாளிதழ்களில் லைஃப் ஸ்டைல் பற்றி ஆர்ட்டிகிள் எழுதியிருக்கேன். இனிமேல், எழுத்தில் கவனம் செலுத்தலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.. மறுபடியும் வேலை காரணமா லண்டன் போறேன்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க