`பிரதமரைத் தேர்ந்தெடுக்கப்போவது அ.ம.மு.க-தான்!' - மேலூரில் அதிர்ந்த டி.டி.வி. தினகரன் | madurai area speech in ttv thinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:21:00 (06/04/2019)

`பிரதமரைத் தேர்ந்தெடுக்கப்போவது அ.ம.மு.க-தான்!' - மேலூரில் அதிர்ந்த டி.டி.வி. தினகரன்

பிரதமரைத் தேர்ந்தெடுக்கப்போவது அ.ம.மு.க-தான் என மேலூர் பிரசாரத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார்.

தினகரன்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வாக்கு சேகரிக்க டி.டி.வி. தினகரன் வருகைக்காக தொண்டர்கள் காத்துக்கிடந்தனர். குறிப்பிட்ட நேரத்தைவிட வெகு நேரம் கழித்து வந்த தினகரன் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் அ.ம.மு.க வேட்பாளர் டேவிட் அண்ணாதுரைக்கு வாக்கு சேகரித்தார். அதிக நேரம் பிரசாரத்திற்கு எடுத்துக்கொள்ளாத தினகரன் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.சாமி பற்றி எடுத்துக்கூறினார்.

தினகரன் பிரசாரம்

அனுதாப ஓட்டுகள் ஆர்.சாமிக்கு அதிகமாக உள்ளதால் 7 நிமிடங்களில் 5 நிமிடம் ஆர்.சாமியைப் பற்றியே பேசினார். தினகரன் பேசுகையில்,``பிரதமரைத் தேர்ந்தெடுக்கப்போவது அ.ம.மு.க- தான். பல சிக்கல், பிரச்னைகள் வந்தாலும் வெற்றி உறுதி. நீங்கள் அனைவரும் பரிசுப்பெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார். பெருமளவு அரசியல் காரசாரங்கள் தேவையில்லை, அனுதாப ஓட்டு போதும் என்பது போல டி.டி.வி. தினகரன் பேச்சு இருந்தது. இதனால் வெயிலில் காத்துக்கிடந்த தொண்டர்கள் இடையே சிறிய சலசலப்பு இருந்தது.