போக்குவரத்து நெரிசல்; ஹாரன் சத்தம் - பிரசாரத்தில் அப்செட்டான பிரேமலதா | Horn sounds disturbs Premalatha election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (07/04/2019)

கடைசி தொடர்பு:09:00 (07/04/2019)

போக்குவரத்து நெரிசல்; ஹாரன் சத்தம் - பிரசாரத்தில் அப்செட்டான பிரேமலதா

கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த் வாகனத்தின் பின்னால் நின்ற வாகனங்கள் ஹாரன் ஒலித்ததால் கோபமாக புறப்பட்டுச் சென்றார்.

பிரேமலதா

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வேர்கிளம்பி பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், "மக்களுக்காக வாழுபவர் பொன்.ராதாகிருஷ்ணனை. அவரை வெற்றிப்பெற செய்யுங்கள். அமைச்சராக இருந்து பல பணிகள் செய்துள்ளார். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும். புல்வாமா தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த வலிமையான பிரதமர் மோடி. ஸ்டாலினுக்கு வேறு குற்றச்சாட்டுகள் கிடைக்காததால் வெளிநாடு சென்றார், ஜி.எஸ்டி கொண்டுவந்தார் என வெற்று குற்றச்சாட்டுகளை சொல்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை" என பேசினார்.

பிரேமலதா

பிரேமலதா பேசிக்கொண்டிருக்கும்போது அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் சில வாகன ஓட்டிகள் ஹாரன் ஒலித்தனர். இதனால் டென்சனான பிரேமலதா, "முதுகுபுறம் நின்று வேண்டும் என்றே ஹாரன் அடிக்கிறார்கள். இந்த கூட்டத்திற்கு இடையூறு செய்யவேண்டும் என்று ஹாரன் அடிக்கிறார்கள். இப்படி அநாகரிகமாக செயல்படக்கூடாது. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்வோம். பூவும் இலையும் மாங்காவும் சேர்ந்து முரசு கொட்டும்" என்று ஆவேசமாக கூறிவிட்டு கோபமாக அங்கிருந்து புறப்பட்டார்.