பிரசாரத்திற்கு சென்ற அ.தி.மு.க. தொண்டர் மரணம் - மதுரையில் நடந்த சோகம் | ADMK Follower Dead in Election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (07/04/2019)

கடைசி தொடர்பு:09:49 (07/04/2019)

பிரசாரத்திற்கு சென்ற அ.தி.மு.க. தொண்டர் மரணம் - மதுரையில் நடந்த சோகம்

மதுரையில் முதல்வர் பிரசாரத்திற்கு வந்த அ.தி.மு.க., தீவிர தொண்டர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த அல்லிகுண்டத்தைச் சேர்ந்தவர் செல்லையா  அ.தி.மு.க-வின் தீவிர தொண்டர். அ.தி.மு.க.வின் நிகழ்ச்சிகளை தவிர்க்காமல் கலந்துகொள்வார். மேலும் அ.தி.மு.க-வின் உண்மை விசுவாசியாக இருந்து வந்துள்ளார் செல்லையா. இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இரவீந்திரநாத் குமாரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு முதல்வர் வாக்கு சேகரித்தார். இதில் பெருந்திரளாக தொண்டர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் செல்லையாவும் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார். பிரசாரம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பொது  மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உடன் வந்தவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அ.தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க நிர்வாகம் இறந்த செல்லையா குடும்பத்தினருக்கு உதவி அளிக்க வேண்டும்  என  அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.