‘மதுரையில வாக்கிங் போற ஸ்டாலின் இதை பற்றி பேசக்கூடாது..’ - திண்டுக்கல்லில் எடப்பாடி பேச்சு! | Stalin should not talk about law and order says edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (07/04/2019)

கடைசி தொடர்பு:14:20 (07/04/2019)

‘மதுரையில வாக்கிங் போற ஸ்டாலின் இதை பற்றி பேசக்கூடாது..’ - திண்டுக்கல்லில் எடப்பாடி பேச்சு!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல்லில் பிரசாரம் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கு ஸ்டாலின் மதுரைக்கு வந்து போனதே உதாரணம். தி.மு.க ஆட்சி இருந்த காலத்தில் அவர் துணை முதல்வராக இருந்தார். அப்போது கூட மதுரைக்குள் நுழைய முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்றைய ஆட்சியில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் மதுரையில் சாதாரணமாக நடைப்பயணம் மேற்கொள்ள முடிகிறது. தமிழகம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக இருப்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு’’ என்று பேசிய முதல்வர், உணர்ச்சிவசப்பட்டு, ஒருமையில் ஸ்டாலினை வசைபாடினார்.

எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசியவர், ‘’பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய், உழைக்கும் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கிய கட்சி அ.தி.மு.க. தேர்தல் முடிந்தவுடன் அந்த பணம் உடனடியாக வழங்கப்படும். திண்டுக்கல்லில் போட்டியிடும் ஜோதி முத்துக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

முன்னதாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ‘’ஸ்டாலின் புறக்கடை வழியாக தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார். ஸ்டாலினுக்கும் தி.மு.க.,வுக்கும் என்ன சம்பந்தம். தி.மு.க வின் தலைவர் பதவிக்கு முறையாக அழகிரி வந்திருக்க வேண்டும். ஆனால் புறக்கடை வழியாக ஸ்டாலின் வந்திருக்கிறார். தமிழகத்தின் ஒப்பற்ற முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவர் தலைமையில் உள்ள பொற்கால ஆட்சி தொடரும்’’ என்றார்.

முதலமைச்சர் கூட்டத்துக்கு டோக்கன்...

டோக்கன் 

எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிர்வாகிகள் ஆட்களை அழைத்து வந்தனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மாநகராட்சி அருகில் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வாங்கிய பிறகே பெண்கள் மேடைக்கு முன்பாக வந்து அமர்ந்தனர். டோக்கனில் பொங்கல் என அச்சிடப்பட்டிருந்தது.r

டோக்கன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க