`காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளைத் தராது!' - கே.எஸ்.அழகிரி | Congress does not give false promises, says k.s.alagiri

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (07/04/2019)

கடைசி தொடர்பு:18:30 (07/04/2019)

`காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளைத் தராது!' - கே.எஸ்.அழகிரி

"வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்குவது குறித்து நன்கு சிந்தித்து, பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி தான் இந்த முடிவினை எடுத்து உள்ளோம். காங்கிரஸ் எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை வழங்காது" என காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக கோவில்பட்டிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வருகை தந்தார். இதன் பின்பு கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில் "இந்தியாவில் உயர்கல்வி படித்த அனைத்து மாணவர்களுக்கும் வங்கிகள் மூலமாக வழங்கப்பட்ட கல்வி கடன் முழுவதும் இருக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் இலவசமாக 10 ஆண்டுகாலம் கல்வி செலவு ஏற்கும் திட்டம் கொண்டு வந்த போது முடியாது என்றார்கள், ஆனால், நாங்கள் அந்த திட்டத்தினையும் சிறப்பாக செயல்படுத்தினோம்.

காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதியை எப்போதும் வழங்காது என்றும், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான 100நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வந்த போது முடியாது என்று பல கட்சியினரும் கூறினார்கள், ஆனால் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவில் நாங்கள் நிறைவேற்றிக் காட்டினோம். மாணவர்களுக்கு கல்வி கடன் கொடுப்பது இயலாது என்று கூறினார்கள். அதையும் நிறைவேற்றினோம்.

கே.எஸ்.அழகிரி பிரசாரம்

மாதம் ரூ.6 ஆயிரம்  உதவிக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடிதான் தேவை. இன்றைய நிலையில் இந்தியாவின் மொத்த வருமானம் ரூ.260 லட்சம் கோடி, இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி என்பது பெரிய தொகை கிடையாது. எங்களால் கொடுக்க முடியும்.
நாங்கள் சிந்தித்து, பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி தான் இந்த முடிவினை எடுத்து உள்ளோம்.

காங்கிரஸ் இன்று நேற்று முளைத்த கட்சி கிடையாது. 100  ஆண்டுகளுக்கு மேலான கட்சி, ஒரு உறுதிமொழி, தீர்மானத்தை எடுக்கும் நன்கு ஆலோசித்து விட்டுதான் எடுப்போம்.ஊழல் குறித்து வேறு யார் குற்றம் சாட்டினாலும் பரவாயில்லை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளது வேடிக்கையானது. இந்த ஊரில் கொள்ளையடிப்பது யார்?. ஊழல் செய்வது யார்?. உலகத்திற்கே தெரியும்.

கே.எஸ்.அழகிரி பிரசாரம்

தியகாத்தினால் பழுத்த இயக்கம் நாங்கள். பல்லாண்டு காலம் சிறைகளை அனுபவித்து சுதந்திரத்தினை வாங்கி கொடுத்தோம். இன்றளவும் எங்கள் தலைவர் காமராஜரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதே போன்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் திறந்த புத்தகமாக இருக்கிறோம். அ.தி.மு.க., தலைவர்களின் வாழ்க்கை தெரியும். ஊழல் குற்றச்சாட்டுக்காக யாருக்கு தண்டனை கொடுக்கப்பட்டது என்பதும் தெரியும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க