`தைலாபுரத்தில் விருந்து நடக்கல, அங்கு நடந்தது வேற!'- எடப்பாடி குறித்து திருமாவளவன் அதிர்ச்சித் தகவல் | CM went to Thailapuram garden to give money only, says Thirumavalavan

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (08/04/2019)

கடைசி தொடர்பு:12:25 (08/04/2019)

`தைலாபுரத்தில் விருந்து நடக்கல, அங்கு நடந்தது வேற!'- எடப்பாடி குறித்து திருமாவளவன் அதிர்ச்சித் தகவல்

”பணம் கொடுக்கத்தான் எடப்பாடி தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்றார்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

திருமாவளவன்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில், தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் ரவிக்குமாரை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் வாக்கு சேகரித்தார். அப்போது, “தி.மு.க தலைமை ஏற்றிருக்கும் கூட்டணியில் கொள்கை சார்ந்த கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மோடியை விரட்டுவதோடு, ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் சூளுரை ஏற்றுள்ளார். அதனை நிறைவேற்றும் பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. நம்மை எதிர்த்துப் போட்டியிடுபவர்களின் கூட்டணி, வணிகர்களின் வியாபாரக் கூட்டணி. பேரம் படிந்தபின் உருவான கூட்டணி. ஆனால் எங்களுடைய கூட்டணி, மக்கள் பிரச்னைகளுக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒன்றுசேர்ந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

பரிசுத்தமான கொள்கைகளைக்கொண்ட கூட்டணி. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றிபெறுவது உறுதி. ஆனால், இந்த வெற்றியைத் தடுக்க சிலர் குறுக்குவழியைக் கையாண்டுவருகின்றனர். நாடு முழுவதும் வீசும் மோடி எதிர்ப்பு அலை தமிழகத்தில் அதிகமாக வீசுகிறது. தற்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெண்களுக்கு எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி சிலர் அபாண்டமாகப் பேசிவருகின்றனர். தேர்தலை மனதில்வைத்து அவர்கள் செய்யும் அந்த யுக்தி, மக்களிடம் எடுபடாது. கடைசி நேரத்தில் அவர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். பணம் கொடுப்பார்கள். நீங்கள் ஏமார்ந்துவிடக் கூடாது. அ.தி.மு.க அணியில் 1% வாக்குவங்கி வைத்திருக்கும் கட்சிக்கு 100 கோடி ரூபாய் என்றும், 5% வாக்குவங்கியைக் கொண்ட கட்சிக்கு 500 கோடி ரூபாய் என்றும் பேரம்பேசியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

மக்களவைத் தேர்தல்

அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு உங்களிடம்தான் வருவார்கள். வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளை இவர்கள் பணத்திற்கு அடமானம் வைத்துவிட்டார்கள். தேசத்தை மாற்றும் சக்தி பொதுமக்களிடம்தான் உள்ளது. தற்போது, காவல் துறை வாகனம் மற்றும் அரசு ஆம்புலன்ஸ் மூலம் தமிழகம் முழுக்க பணம் கொண்டுசெல்லப்படுவதாகத் தகவல் வந்திருக்கிறது. தேர்தல் ஆணையமும், காவல் துறையும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க பிரமுகர்களிடம் எந்தச் சோதனையும் செய்ததில்லை. போட்டியிடும் வேட்பாளர், அதிகபட்சம் 70 லட்சம் வரை செலவு செய்துகொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக முதல்வர் செல்லும் ஒரு பிரசாரத்திற்கு மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் செலவுசெய்கிறார்கள். ஆட்களை அழைத்துவருவது, பிரியாணி கொடுப்பது என்று பணத்தை இறைக்கிறார்கள்.

திருமாவளவன்

ஆனால், தேர்தல் ஆணையம் அதையெல்லாம் சோதனைசெய்யவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. பா.ஜ.க 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விருந்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்றனர். அன்றைய தினம் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஏற்கெனவே பேரம் பேசிய பணத்தைக் காவல் துறை வாகனம்மூலம் அங்கு எடுத்துச்சென்று கொடுத்தார்களே தவிர, விருந்தெல்லாம் அங்கு எதுவும் நடைபெறவில்லை” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க