''அரசியலில் இருப்பதற்கு நல்ல ஆரோக்கியம் வேணுமே!''- பழம்பெரும் நடிகை சாரதா | '' Health is very important for being a politician'' - says actress Saratha

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (08/04/2019)

கடைசி தொடர்பு:13:00 (08/04/2019)

''அரசியலில் இருப்பதற்கு நல்ல ஆரோக்கியம் வேணுமே!''- பழம்பெரும் நடிகை சாரதா

ழம்பெரும் நடிகை சாரதா. சிறந்த நடிகைக்காக மூன்று முறை தேசிய விருது, தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது, ஆந்திர அரசின் நந்தி விருது என  விருதுகளாலேயே அலங்கரிக்கப்பட்டவர். சமீபத்தில், தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கேரளாவில் இருக்கிற 'ஜஸ்டிஸ் ஹேமா வாரிய'த்தின் 3 மெம்பர்களில் ஒருவராக பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறவர், சின்ன இடைவெளியில் சென்னை வந்து தன் திரையுலகத் தோழிகளைச் சந்தித்திருக்கிறார். சென்னை, கேரளா என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவரை போனில் பிடித்து, எப்படி இருக்கிறீர்கள் மேடம் என்றோம். 

தன் தோழிகளுடன் நடிகை சாரதா

''நல்லா இருக்கேன்மா. சினிமா துறையைச் சேர்ந்த வயசான, ஏழ்மை நிலையில் இருக்கிற பெண்களுக்கு உதவிசெய்கிற வாரியத்தில், கடந்த ரெண்டு வருஷமா ஒரு பொறுப்பில் இருக்கேன். அதனால நான் ரொம்ப பிசி. இப்ப, வாரியத்துல ஒரு வேலை இருக்கிறதால கேரளாவுக்கு வந்திருக்கேன். மத்தபடி சென்னையில்தான் செட்டில்டு நான்'' என்றவர், தன் வாரிய வேலையின் தன்மையைப் பற்றி சொன்னார்.  

''ஃபிலிம் இன்டஸ்ட்ரியில் நான் சீனியர் மோஸ்ட் என்பதால், என்னை இந்த வாரியத்துக்கு செலெக்ட் செஞ்சாங்க. என்கூட ஒரு ஜஸ்டிஸ், ஒரு கலெக்டர் இந்த வாரியத்துல இருக்காங்க.  சினிமாவில் இருக்கிற பெண்களுடைய கஷ்டங்கள் என்னென்ன  என்று விசாரித்து, அதையொரு ஸ்கிரிப்ட்டா ரெடி பண்ணி,  மாநில அரசுக்கு அனுப்புற வேலைதான் எங்களுடையது'' என்றவரிடம், அவருடைய அரசியல் வாழ்வின் தற்போதைய நிலைபற்றி விசாரித்தோம். 

''தெலுங்கு தேசம் கட்சியில் தீவிரமா இயங்கிக்கிட்டிருந்தது எல்லாம் ஒரு காலம். இப்ப நான் அரசியலில் இருந்து தூரமாகத்தான் இருக்கேன். அது, கடின உழைப்பு தேவைப்படுகிற துறை. களப்பணி செய்கிறதுக்கு நல்ல ஆரோக்கியம் முக்கியமில்லையா...'' என்றார்.