`அவர்கள் வேண்டுமென்றார்கள்; நாங்கள் வேண்டாமென்றோம்!' - 8 வழிச் சாலை தீர்ப்புகுறித்து பா.ம.க கருத்து | "Not connect with Alliance to AIADMK and Eight track road project says pmk balu

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (08/04/2019)

கடைசி தொடர்பு:13:40 (08/04/2019)

`அவர்கள் வேண்டுமென்றார்கள்; நாங்கள் வேண்டாமென்றோம்!' - 8 வழிச் சாலை தீர்ப்புகுறித்து பா.ம.க கருத்து

சென்னை  உயர் நீதிமன்றம்

''சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு  தமிழக அரசு  நிலம் கையகப்படுத்தியது செல்லாது'' என சென்னை  உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

எட்டு  வழிச் சாலை திட்டத்திற்கு  விவசாயிகளிடமிருந்து  நிலம்  கையகப்படுத்துவதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள், அன்புமணி உள்ளிட்டோர்  வழக்குத் தொடர்ந்திருந்தனர். வழக்கின் இறுதி விசாரணை,  கடந்த டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். அதன் பின்னர், இந்த பா.ம.க  பாலு வழக்கில் மூன்று மாதங்களுக்குப் பிறகு  தீர்ப்பு வழங்கியுள்ளனர். 

அதில்,  'எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது' என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை  பா.ம.க  வரவேற்றுள்ளது. அதே நேரத்தில், கூட்டணியில் உள்ள அ.தி.மு.க-வுக்கு பலத்த பின்னடைவைக் கொடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து  பா.ம.க வழக்கறிஞர் பாலுவிடம் பேசியபோது, தமிழக  விவசாயிகளின்  நலனுக்கு எதிரானது என்று பாட்டாளி மக்கள் கட்சி  சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த அடிப்படையில் இந்தத் திட்டத்தால் விவசாயிகள் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுவார்கள் என்பதைத் தெளிவாகக் கூறினோம். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, விவசாயிகளுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் அமைப்பின் அனுமதி பெறாமல் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேவையான ஆலோசனைகளைப் பெறாமல் அவசரகதியில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அதனால், தமிழக அரசின் இந்தத் திட்டம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, பா.ம.க-விற்கு கிடைத்த வெற்றி. எனவே, இதற்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கொள்கை வேறு. அ.தி.மு.க-வுடனான கூட்டணி வேறு " அவர்கள்,  எட்டு வழிச் சாலை வேண்டும் என்ற கொள்கையில் உள்ளனர் . நாங்கள், எட்டு வழிச் சாலை வேண்டாம் என்ற  கொள்கையில் இருக்கிறோம் " என்றார்