தொண்டாமுத்தூரைத் தொடர்ந்து பொள்ளாச்சி! - மு.க.ஸ்டாலின் மீது பாய்ந்த வழக்கு | Pollachi police filed fir Against MK Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (08/04/2019)

கடைசி தொடர்பு:17:00 (08/04/2019)

தொண்டாமுத்தூரைத் தொடர்ந்து பொள்ளாச்சி! - மு.க.ஸ்டாலின் மீது பாய்ந்த வழக்கு

மு.க.ஸ்டாலின் மீது பொள்ளாச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளில் கடந்த வாரம் பிரசாரம் செய்தார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் வைத்தார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை அவர்கள் தப்பிக்க வைப்பதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து, வேலுமணி மீது அவதூறு பரப்புவதாக அ.தி.மு.க-வினர் ஸ்டாலின் மீது போலீஸில் புகார் கொடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் ஸ்டாலின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, பொள்ளாச்சி சென்றிருந்த மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணி ஆகியோர் மீது அடிப்படை ஆதாரங்களின்றி அவதூறு பரப்பும் விதமாகப் பேசுவதாகவும் திருமலைச்சாமி என்பவர் பொள்ளாச்சி போலீஸிடம் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், மு.க.ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.