`எல்லா ஹீரோக்களையும் அண்ணானுதான் கூப்பிடுவேன்!' - நடிகை நளினி | actress nalini talks about her cineme journey

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (08/04/2019)

கடைசி தொடர்பு:19:00 (08/04/2019)

`எல்லா ஹீரோக்களையும் அண்ணானுதான் கூப்பிடுவேன்!' - நடிகை நளினி

நளினி

1980-களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை நளினி, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். தன் நடிப்பு அனுபவங்களைப் பகிர்கிறார், நளினி.

``அப்பா வைக்கம் மூர்த்தி, சினிமா டான்ஸ் மாஸ்டர். எனக்கும், என் கூடப் பிறந்தவங்களுக்கும் சுத்தமா சினிமா ஆசை இல்லை. ஆனா, யதேச்சையா நான் நடிகையானேன். நூறு படங்களுக்கு மேல ஹீரோயினா நடிச்சாலும், கஷ்டப்பட்டுத்தான் நடிச்சேன். இஷ்டப்பட்டு நடிக்கலை. அப்பாவும் நானும் ரெண்டு மலையாளப் படத்துல சேர்ந்து வேலை செய்திருக்கிறோம். அவர், `என் பெயரை எப்படியாச்சும் காப்பாத்திடுனு'னு சொல்லித்தான் எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பார். அதனால், ஒருவித பயத்துடன் சரியா டான்ஸ் ஆடிடுவேன். அப்பாவுக்கு எல்லா டான்ஸ் மாஸ்டரையும் தெரியும். எனவே, `ஒரு டான்ஸ் மாஸ்டர் பொண்ணா இருந்துட்டு நல்லா ஆடமாட்டேங்கிறே'னு யாரும் பேச இடம் கொடுக்காம பார்த்துகிட்டேன். சினிமாவில் எனக்குச் சவாலா இருந்தது டான்ஸ் மட்டுமே. 1980-களில் முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் நடிச்சேன். எல்லா ஹீரோக்களையும் அண்ணானுதான் கூப்பிடுவேன்" என்பவர் தன் நண்பர்கள் குறித்துப் பேசுகிறார்.

நளினி

``சென்னை நுங்கம்பாக்கம் அரசுப் பள்ளியிலதான் நான் படிச்சேன். சினிமா பயணத்தால் எட்டாவது மேல என்னால படிக்க முடியலை. `உயிருள்ளவரை உஷா' படம் ரிலீஸான பிறகு, ஸ்கூல்ல எல்லோரும் என்னை `உஷா'னு கிண்டல் பண்ணியதை எப்போதும் மறக்க முடியாது. நான் ஹீரோயினா நடிக்கும்போதே என் நண்பர்கள் ஷூட்டிங் பார்க்க வருவாங்க. என் ஸ்கூல் நண்பர்களோடு இப்போவரை நட்பில் இருக்கேன். வருஷத்துக்கு ஒருமுறை நாங்க மீட் பண்ணுவோம். இந்த வருஷ மீட்டிங், கடந்த மாதம் சிறப்பா நடந்துச்சு" என்கிறார் புன்னகையுடன்.