`குடிக்கத் தண்ணியில்ல... ஓட்டு ஒரு கேடா?' - தம்பிதுரையை முற்றுகையிட்ட கிராம மக்கள் | Dindigul village people opposes ADMK karur MP Thambidurai's election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (08/04/2019)

கடைசி தொடர்பு:21:30 (08/04/2019)

`குடிக்கத் தண்ணியில்ல... ஓட்டு ஒரு கேடா?' - தம்பிதுரையை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தம்பிதுரை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதி கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ வாக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பரமசிவம் உள்ளார். இந்தத் தொகுதியில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்து வருகிறார் தம்பிதுரை. நேற்று இவருக்காக இங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தம்பிதுரை 

இன்று வேடசந்தூர் அருகேயுள்ள லந்தக்கோட்டை கிராமத்துக்கு வாக்கு கேட்டு சென்றார் தம்பிதுரை. அவருடன் வேடசந்தூர் எம்.எல்.ஏ பரமசிவம் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சென்றார்கள். ஆனால், ஊரில் நுழைந்ததும் தம்பிதுரையை மக்கள்  முற்றுகையிட்டனர்.

தம்பிதுரை

தம்பிதுரையை வாக்கு சேகரிக்க விடாமல், பெண்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். ``குடிநீருக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. குடிநீர் கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. போன முறை ஓட்டு  போட்டோம். ஐந்து வருடம் முடிந்து விட்டது இன்னும் எங்கள் பிரச்னைக்கு வழி காணவில்லை. கலங்கிப்போன தண்ணீரை குடித்துக் கொண்டிருக்கிறோம்.

தம்பிதுரை 

உங்களுக்கு ஓட்டு தேவையின்னா மட்டும் ஓடி வருவீங்க...வாங்கிட்டு போனா, அடுத்த தேர்தலுக்குதான் எட்டிப் பார்ப்பீங்களா?. நாங்க குடிக்குற தண்ணி எப்படியிருக்குன்னு பாருங்க!' எனப் பலரும் ஆக்ரோஷமாகச் சத்தமிட்டனர். அப்போது தம்பிதுரையுடன் பெண்கள் வாக்கு வாதம் செய்ததை சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். அவர்களை எடுக்கக் கூடாது எனக் கட்சியினர் தடுத்தனர். இதனால் அங்குச் சலசலப்பு உண்டானது. கடைசி வரை மக்கள் கோபம் அடங்கவில்லை. இதனால் அங்கிருந்து சென்றார் தம்பிதுரை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க