`சுனாமியோ, பூகம்பமோ வந்தால்கூட அ.தி.மு.க-வை அழிக்க முடியாது!' - மானாமதுரையில் ஓ.பி.எஸ் பேச்சு | OPS election campaign in Manamadurai

வெளியிடப்பட்ட நேரம்: 21:24 (08/04/2019)

கடைசி தொடர்பு:21:24 (08/04/2019)

`சுனாமியோ, பூகம்பமோ வந்தால்கூட அ.தி.மு.க-வை அழிக்க முடியாது!' - மானாமதுரையில் ஓ.பி.எஸ் பேச்சு

சுனாமியோ, பூகம்பமோ வந்தாலும்கூட அ.தி.மு.க-வை அழிக்க முடியாது என்று மானாமதுரை தொகுதியில் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ்.

மானாமதுரை. ஓ.பி.எஸ்

மானாமதுரை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் நாகராஜனையும், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பி.ஜே.பி வேட்பாளர் ஹெச்.ராஜாவையும் ஆதரித்து மானாமதுரை தேவர் சிலை முன்பு பிரசாரம் செய்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர் பேசுகையில், ``இந்தத் தேர்தல் மூலம் தி.மு.கவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். தமிழக மக்களுக்கு எண்ணற்ற சலுகைகளை அறிவித்து வருகிறது அ.தி.மு.க அரசு. அந்தத் திட்டங்களுக்கு எல்லாம் தடை போடுகிறது தி.மு.க. தி.மு.க-வினர் ஏழை எளிய மக்களுடைய சொத்துகளை அபகரித்தார்கள். சொத்துகளை இழந்தவர்களுக்கு அவர்களின் சொத்துகளை மீட்டு ஒப்படைக்கப்பட்டது. அதற்காகவே நில அபகரிப்பு பிரிவு ஒன்றைத் தொடங்கினார் ஜெயலலிதா.

பூகம்பம், சுனாமி என எது  வந்தாலும் அ.தி.மு.க-வை அசைக்க முடியாது. மாமன் மச்சினன் சண்டையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டது. அதில் மூன்று அப்பாவிகள் உயிரிழந்தனர். அந்தக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுத்தது அ.தி.மு.க அரசு.

ஓ.பி.எஸ் பிரசாரம்


ஸ்டாலின் தினமும் கலர், கலரா  சட்டை போட்டு பொதுமக்களை ஏமாற்ற முயற்சி செய்தார். டீ குடிப்பதுபோல் நடிக்கிறார். தான் டீக்கடை வைத்து நடத்தியவன் என்று கமென்ட் அடிக்கிறார். ஆனால், ஸ்டாலின் செல்லும் இடங்களில் டீ குடித்தாலும், புரோட்டா சாப்பிட்டாலும் காசு கொடுப்பதில்லை ஏமாற்று வேலையைச் செய்கிறார். ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கியது தமிழக அரசு. தற்போது  ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறுகிறது. கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்களால் தான் மானாமதுரைக்கு தேர்தல் நடைபெறுகிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க