ரவுடி கொலை வழக்கில் மதுரை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் நீதிமன்றத்தில் சரண்! | hindu munnani secretary surrender in murder case

வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (09/04/2019)

கடைசி தொடர்பு:08:55 (09/04/2019)

ரவுடி கொலை வழக்கில் மதுரை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் நீதிமன்றத்தில் சரண்!

ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், இந்து முன்னணி மதுரை மாவட்டச் செயலாளர் நீதிமன்றத்தில் சரண்டராகியுள்ளது, தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார்

மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர்மீது கொலை உட்பட குற்ற வழக்குகள்  நிலுவையில் உள்ளன. இவர், தன்னுடைய இரண்டாவது திருமணத்துக்கு தாலி வாங்க, கடந்த 6-ம் தேதி சோலைஅழகுபுரத்தில் உள்ள நகைக்கடைக்கு நண்பர் ராமகிருஷ்ணனுடன்  சென்றபோது,  ஒரு கும்பலால் துரத்தப்பட்டு வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

இதுபற்றி ஜெய்ஹிந்துபுரம் காவல் துறை, ஐயப்பனின் நண்பர் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தியதில், ''மூன்று வருடங்களுக்கு முன் மனைவி இறந்துள்ள நிலையில், கட்டட வேலைக்குச் சென்றுவந்த ஐயப்பன், இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்து, நகை வாங்கச்  சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஐயப்பனுக்கும்  இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாருக்கும் இடையே முன் பகை இருந்துள்ளது. அன்றைய தினம் சதீஷ்குமார், தன் நண்பர்கள் ஜெய்கணேஷ், அருள்முருகன், லிங்கம், விக்னேஷ் ஆகியோருடன் வந்து கொலை செய்துள்ளார்' என்று கூறியுள்ளார். அப்பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்ததில், சம்பந்தப்பட்டவர்கள்,  கொலை செய்தவர்கள் பதிவாகியுள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,  இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள், திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தேர்தல் காலம் என்பதால், இந்து முன்னணி நிர்வாகிமீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நீங்க எப்படி பீல் பண்றீங்க