``மாணவர்களின் கனவை நனவாக்கவே நீட் விலக்கு!” – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து கே.எஸ்.அழகிரி | k.s.alagiri about congress party election manifesto

வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (09/04/2019)

கடைசி தொடர்பு:09:55 (09/04/2019)

``மாணவர்களின் கனவை நனவாக்கவே நீட் விலக்கு!” – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து கே.எஸ்.அழகிரி

``ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பாடத்திட்டம் என்ற நிலையில் இருக்கும்போது இந்தியா முழுவதும் நீட் தேர்வு மட்டும் எப்படி சரியாக இருக்கும்? மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்க, விரும்பும் மாநிலங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அழகிரி

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் மக்கள் மத்தியில் கதாநாயகனாக இருக்கிறது. இதில், பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம், விரும்பும் மாநிலங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு ஆகிய இரண்டு வாக்குறுதிகள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள 25 கோடி மக்களுக்கு, மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் கொடுக்கும் உன்னதமான திட்டத்தை நிறைவேற்ற முடியுமா... இது சாத்தியமா?  என்ற கேள்விகள் எதிர்க் கட்சிகளால் எழுப்பபடுகின்றன.

காங்கிரஸ்கட்சி, ஒரு பாரம்பர்யமான அரசியல் இயக்கம். மிகவும் யோசித்து, பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசித்துதான் இந்த வாக்குறுதியை அளித்துள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலமாக, ஆண்டு ஒன்றுக்கு 3.5 லட்சம் கோடி செலவாகும். இந்தியாவின் மொத்த வருமானம் 230 லட்சம் கோடி ஆகும். எனவே, இத்திட்டத்தைச் செயல்படுத்துவது எளிதானதுதான். நீட் தேர்வு, மாணவர்களின் வாழ்கையைப் பாதிப்பதாக இருக்கிறது. நீட் தேர்வு, அந்தந்த மாநிலங்கள் விரும்பினால் வைத்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளோம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒவ்வொரு பாடத்திட்டம் உள்ள நிலையில், மருத்துவப் படிப்பிற்கு இந்தியா முழுவதும் ஒரே தேர்வு என்பது மட்டும் எந்த வகையில் சரியாக இருக்கும்?

மாநிலப் பாடத்திட்டத்தில் 90 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட, நீட் தேர்வில் தேர்ச்சிபெறாத நிலைதான் உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் கருதித்தான், விரும்பும் மாநிலங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக காங்கிரஸ் தலைமை முடிவுசெய்துள்ளது.  பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் என்ன தீர்வு இருக்கிறது? அதில், மாநிலங்களின் பிரச்னைகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்குமான எந்த விளக்கமும் இல்லை” என்றார்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க