இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்! -ரோலர் ஸ்கேட்டிங்கில் அசத்தும் 6 வயது சிறுமி இனியா | chennai school girl achieve roller skating national records

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (09/04/2019)

கடைசி தொடர்பு:15:05 (09/04/2019)

இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்! -ரோலர் ஸ்கேட்டிங்கில் அசத்தும் 6 வயது சிறுமி இனியா

சக்கரங்களுடன் கூடிய ஷூக்களை அணிந்து ஸ்கேட்டிங் செய்வது நம்மில் பலர் அறிந்ததே. ஒரே நேர் கோட்டில் சக்கரங்கள் கொண்ட ஷூக்களை அணிந்து ரோலர் ஸ்கேட்டிங் செய்வது கொஞ்சம் ஆபத்துகள் நிறைந்த விளையாட்டுதாம். அந்த ரோலர் ஸ்கேட்டிங்கில் தேசிய அளவில் சாதனை படைத்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமி இனியா. இது குறித்து இனியாவிடம் பேசினோம்.

இனியா

 

``எனக்கு ஸ்கேட்டிங் ரொம்பப் பிடித்தமான விளையாட்டு. என்னோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் ஸ்கேட்டிங் கத்துக்கிறாங்க. நானும் மூன்று வருடங்களாக கத்துக்கிறேன். பேசிக் ஸ்கேட்டிங் கத்துக்கிட்ட பிறகு கின்னஸ், லிம்கா சாதனைகள் செய்யலாம்னு மாஸ்டர் சொன்னாங்க. ஆனால், இதற்கு முன் அதில் நிறைய பேர் சாதனை செய்திருப்பதால் யூனிக்காக ட்ரை பண்ணலாம்னு அப்பா சொல்ல, ரோலர் ஸ்கேட்டிங் கத்துக்க ஆரம்பிச்சேன். கத்துக்க ஆரம்பிச்ச நாள்கள்ல தடுமாறி பல இடங்கள்ல விழுந்து எழுந்திருச்சிருக்கேன். விழுந்த அடுத்த நிமிஷமே சட்டுனு எழுந்திருச்சு இயல்பா ஸ்கேட்டிங் பண்ண ஆரம்பிச்சுருவேன். உலக அளவில் விளையாடப் போகும் ஒரு பொண்ணுக்கு மன தைரியமும் ஆட்டிடியூடும் முக்கியம்னு மாஸ்டர் சொல்லிருக்காங்க.ஆரம்பத்தில் மாவட்ட போட்டிகளில் கலந்துகிட்டு பரிசுளை வென்ற நான் இப்போது தேசிய அளவில் பரிசுகளை வாங்கத் தொடங்கியுள்ளேன்''

சிறுமி

 

அடுத்தகட்டமாக உலக அளவிலான போட்டிகளுக்கும் கின்னஸ் சாதனைக்கும் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். இன்னோரு முக்கியமான விஷயம், வருகின்ற ஒலிம்பிக்கில் ரோலர் ஸ்கேட்டிங்கும் ஒரு போட்டியாக சேர உள்ளது. அப்படி சேர்ந்துட்டா என்னுடைய 16 வயதில் நிச்சயம் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்" என்று தன்னம்பிக்கை பொங்கச் சொல்லும் இனியா கடந்த ஆண்டு  யோகாவில் `இந்திய புக் ஆஃப் ரெக்கார்டு' என்ற உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.