``அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கத் தடை!” - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Government teachers taking tuitions for profit is illegal, says HC

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (09/04/2019)

கடைசி தொடர்பு:15:05 (09/04/2019)

``அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கத் தடை!” - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

`அரசுப் பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம்' என டியூஷன் எடுக்கத் தடை விதித்து இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது உயர்நீதிமன்றம்.

கடந்த 2017-ம் ஆண்டு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு பள்ளியிலிருந்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு பள்ளிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் ரங்கநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்றத்தைத் தொடர்ந்து ஆசிரியர் ரங்கநாதன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,

டியூஷன் எடுக்க தடை

மற்றொரு தலைமை ஆசிரியர் மல்லிகாவின் கோரிக்கையினால், ஆசிரியர் ரங்கநாதனுக்கு இடமாற்றம் அளித்திருப்பது உண்மை என்றாலும், இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே இடமாற்றம் என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறி அவரது மனு நிராகரிக்கப்பட்டது. 

மேலும், இந்த வழக்கின் தொடர்ச்சியாக, அரசிடம் ஊதியம் பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், லாப நோக்கத்துடன் தனியாக டியூசன் எடுக்கிறார்கள். இதனால் பல மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. விதிமுறைகளுக்கு முரணாகத்  தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களைக் கண்காணித்து, கடும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

இது தொடர்பான புகார் அளிக்கவும், பள்ளி கல்லூரிகளில் நடக்கும் பாலியல் தொல்லைகள், சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றிய புகார் தெரிவிக்கவும் அரசு உடனடியாக கட்டணமில்லா டோல் ப்ரீ எண்ணை எட்டு வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்று நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார். 

இந்த எண், பள்ளி கல்லூரி அறிவிப்பு பலகைகளில் இடம்பெற வேண்டும் என்றும் பெற்றோர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோரால் இந்த எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்களை 24 மணி நேரங்களுக்குள்ளாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

மரக் கன்று

வழக்கில் சம்பந்தப்பட்ட  தலைமை ஆசிரியர்கள் ரங்கநாதன் மற்றும் மல்லிகா ஆகியோர் அவர்கள் பணிபுரியும் பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் அது தொடர்பாக கோவை மாநகர ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.