மோடி சொன்னதும் நடந்ததும்: `பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா'-வில் என்ன நடந்தது? பகுதி - 5 | What happened in Pradhan mantri Ujjwala Yojana

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (10/04/2019)

கடைசி தொடர்பு:11:10 (10/04/2019)

மோடி சொன்னதும் நடந்ததும்: `பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா'-வில் என்ன நடந்தது? பகுதி - 5

முன் செயலில் இருந்த அனைத்துத் திட்டங்களையும் பி.ஜே.பி அரசு நிறுத்தியதுடன், மாநில அரசுக்குக் கடும் அழுத்தம் கொடுத்து, அனைத்துத் திட்டங்களும் உஜ்வலா திட்டத்தின் கீழ் கொண்டுவரச் செய்தது...

மோடி சொன்னதும் நடந்ததும்: `பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா'-வில் என்ன நடந்தது? பகுதி - 5

த்திய பி.ஜே.பி. அரசின் பல்வேறு திட்டங்களும், அவற்றின் செயல்பாடுகளும் பற்றி இந்தத் தொடரில் நாம் அறிந்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் `பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா'-வின் செயல்பாடு பற்றி இப்பகுதியில் காண்போம்...

மோடி சொன்னதும் செய்ததும்

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா: 

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களில் சுமார் பத்துக் கோடி குடும்பத்தினர் விறகு, கரி மற்றும் மண்ணெண்ணெயைக் கொண்டே சமையல் செய்து வருவது தெரியவந்தது. நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் எல்.பி.ஜி எனப்படும் சமையல் எரிவாயு அடுப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் உஜ்வாலா யோஜனா திட்டம். அதன்படி, 2019-ம் ஆண்டுக்குள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஐந்து கோடி குடும்பங்களுக்கு அரசின் மானியத்துடன் எல்.பி.ஜி. இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2016-ல் இத்திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

`உஜ்வாலா யோஜனா'-வில் நடந்தது என்ன?

உஜ்வாலா யோஜனா

இந்தத் திட்டமானது, இந்தியா முழுவதும் 714 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு, கடந்த மாதம் (மார்ச்) 5-ம் தேதிவரை 7.19 கோடி புதிய எல்.பி.ஜி. இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1.04 கோடி பேர் சமையல் எரிவாயுக்கு அவர்கள் பெற்றுவந்த மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். புதிய எல்.பி.ஜி. இணைப்புகளுக்காக மத்திய அரசு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 4,751 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்படுத்திய `ராஜீவ் காந்தி கிராமின் எல்.பி.ஜி விட்ராக் யோஜனா' (RGGLV) என்ற திட்டம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, ஏழை மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்கும் திட்டமாகும். தொலைநோக்குப் பார்வையுடன், எண்ணெய் நிறுவனங்களின் சி.ஆர்.எஸ். நிதி பயன்பாட்டின் அடிப்படையில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதில், 2014-ம் ஆண்டுவரை 16,000 வினியோகஸ்தர்கள் இந்தியா முழுவதும் ஏற்படுத்தப்பட்டன. 2015-2016-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி எல்.பி.ஜி. திட்டத்தின் கீழ் ஐந்து எண்ணெய் நிறுவனங்களின் சார்பில் ஒரு கோடிக்கும் மேல் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு சமையல் எரிவாயு வழங்கும் திட்டங்கள் மாநில அரசு சார்பிலும் செயல்பட்டு வந்தது. உதாரணமாக, டெல்லி மாநில அரசின் சார்பில் மண்ணெண்ணெய் இல்லாத மாநிலத்தை உருவாக்கும்வகையில் வழங்கப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கை சுமார் 1.83 லட்சம் ஆகும்.

இந்த அனைத்துத் திட்டங்களையும் பி.ஜே.பி அரசு நிறுத்தியதுடன், மாநிலங்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு, எண்ணெய் நிறுவனங்களின் சி.ஆர்.எஸ். நிதியில் செயல்படுத்தப்பட்ட எரிவாயு இணைப்புகள் நிறுத்தப்பட்டன. பின்னர் அனைத்துத் திட்டங்களும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

எரிவாயு இணைப்புகள் வழங்கும் திட்டத்தைப் பொறுத்தவரை, எந்தவொரு தொலைநோக்குப் பார்வையோ, சிந்தனையோ இல்லாமல், வெறும் இணைப்புகளின் எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு மோடி அரசு மெத்தனப் போக்குடன் செயல்பட்டது. இதனால், ஏற்பட்ட விளைவு என்னவோ அரசுக்கு வீண் செலவு மட்டும்தான். 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட 7.19 கோடி இணைப்புகளில் 3.82 கோடி இணைப்புகள் செயல்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தத்தில் உஜ்வாலா யோஜனாவின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட எரிவாயு இணைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை பயனற்றுப் போய் விட்டதே, இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலையாக உள்ளது. இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தும்போது, சரியான முன்னேற்பாடுகளுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

- தொடரும்...


டிரெண்டிங் @ விகடன்