கரும்புத் தோட்ட வேலைக்காகப் பெண்களின் கர்ப்பப்பைகளை நீக்கும் கான்ட்ராக்டர்கள்! - அதிர்ச்சித் தகவல் அம்பலம் | Maharashtra’s Beed district women's have no wombs

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (09/04/2019)

கடைசி தொடர்பு:20:40 (09/04/2019)

கரும்புத் தோட்ட வேலைக்காகப் பெண்களின் கர்ப்பப்பைகளை நீக்கும் கான்ட்ராக்டர்கள்! - அதிர்ச்சித் தகவல் அம்பலம்

கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள் மாதவிடாய் சமயத்தில் ஓய்வெடுப்பார்கள் என்பதற்காகவே அவர்களின் கர்ப்பப்பைகள் அகற்றப்படும் அவலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கரும்பு

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிலும், கரும்பு விவசாயம்தான் அங்கே பிரதானம். பெரும்பாலான மக்கள் அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் கூலிகளாக வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் பெண்களும் அடக்கம். கரும்புத் தோட்டங்களில் வேலைபார்க்கும் பெண்களுக்கு கர்ப்பப்பைகள் நீக்கப்பட்டிருப்பதும், அதற்கான காரணமும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

மாதவிடாய் சமயங்களில் பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பெண்களால் கடின உழைப்பில் ஈடுபட முடியாது. அந்தச் சமயங்களில் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும். அதைக் காரணமாக வைத்து கரும்புத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்களின் கர்ப்பப்பையை நீக்கவேண்டும் எனக் கரும்புத் தோட்ட கான்ட்ராக்டர்கள் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

கர்ப்பப்பை

``எங்கள் கிராமத்தில் கர்ப்பப்பையோடு ஒரு பெண்ணைப் பார்ப்பதென்பது அரிதிலும் அரிதான காரியம். அனைத்துப் பெண்களுமே  நீக்கப்பட்டவர்கள்தான்'' என்கிறார், ஹாஜிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மண்டா உகலே என்கிற பெண்மணி. இந்தக் கிராமத்துக்கு அருகில் உள்ள வஞ்சரவாடி என்ற கிராமத்தில் வசிக்கும் ஐம்பது சதவிகித பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏழைப் பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி இந்த அவலம் நடந்தேறிவருகிறது. பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் முதல் மெனோபாஸ் வரை பல்வேறு உடலியல் மாற்றங்கள் நடைபெற கர்ப்பப்பை மிகவும் அவசியம் என்பது மருத்துவ உண்மை. கர்ப்பப்பையை நீக்குவதால் ஹார்மோன் குறைபாடுகள் முதல் புற்றுநோய்வரை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க