`தமிழகத்தில் இரக்கமற்ற ஆட்சி நடக்கிறது!' - உதயநிதி காட்டம் | udhayanidhi stalin Election campaign at thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (09/04/2019)

கடைசி தொடர்பு:22:30 (09/04/2019)

`தமிழகத்தில் இரக்கமற்ற ஆட்சி நடக்கிறது!' - உதயநிதி காட்டம்

என்னை ஸ்டாலினின் கொடுக்கு என ஓ.பி.எஸ்.,விமர்சனம் செய்கிறார். நான் கொடுக்குதான், கொட்டினால் வலிக்கும். 
அ.தி.மு.க கூட்டணியை மெகா கூட்டணி என்கிறார்கள். ஆனால் மானம் கெட்ட கூட்டணி எனத் தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பழனிமாணிக்கம், சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நீலமேகம் ஆகியோருக்கு வாக்கு  கேட்டு, தஞ்சாவூர் வல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, ஸ்டாலின் பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அலையாகக் கூடுகிறார்கள். இதை மோடி எதிர்ப்பு அலை எனச் சொல்கிறார்கள். ஆனால், இது ஸ்டாலின் ஆதரவு அலையே. மோடி பெயரைச் சொன்னாலே கழுவிக் கழுவி ஊற்றுகின்றனர். உலகளவில் இப்படி ஒரு பிரதமரை யாரும் பார்த்தது இல்லை. ஐந்து ஆண்டுக்காலம் உலகம் சுற்றும் வாலிபனாக இருந்து 50 நாடுகளுக்கு மேல் சென்றவர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது, நான் உட்பட வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தோம். ஆனால் மோடி வரவில்லை.

பிரசாரம்

வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாகச் சொன்னார். ஆனால் நாமம்தான் போட்டார். அந்த நாமத்தை நாமும் ஏப்ரல் 18 அன்று போட்டு மோடிக்கு கெட்அவுட் சொல்ல வேண்டும். பண மதிப்பிழப்பு செய்து புதிய இந்தியாவை பிறக்கச் செய்வேன், தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்றார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். நீட் தேர்வினால் அனிதா தற்கொலை செய்துகொள்ளவில்லை, மோடியால் கொலை செய்யப்பட்டார். அதற்கு துணை போனவர்கள் ஈ.பி.எஸ்சும்.,ஓ.பி.எஸ்சும்தான். கடந்த ஐந்தாண்டுகளில் 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தியா முழுவதற்கும் மோடிதான் வில்லன்.

கூட்டம்

திரைப்படத்தில் வில்லனுக்கு துணையாக வருவது போல், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,இருந்துகொண்டு மோடி சொல்வதைச் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும் காமெடியன்கள். ஓ.பி.எஸ்ஸை டயர் நக்கி என்றும், ஈ.பி.எஸ்ஸை கவுன்சிலர் பதவிக்குக் கூட லாயக்கு இல்லாதவர் எனவும் அன்புமணி விமர்சனம் செய்தார். அவர்கள் ஆட்சிக்கு எத்தனை மார்க் என ராமதாஸிடம் கேட்ட போது, ஜீரோவிற்குக் கீழே உள்ள மார்க்தான் போட முடியும் என விமர்சனம் செய்தார். ஈ.பி.எஸ்., சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவியைப் பெற்றார். என்னை ஸ்டாலினின் கொடுக்கு என ஓ.பி.எஸ்.,விமர்சனம் செய்கிறார். நான் கொடுக்குதான், கொட்டினால் வலிக்கும். 
அ.தி.மு.க கூட்டணியை மெகா கூட்டணி எனக் கூறி வருகிறார்கள். ஆனால் மானம் கெட்ட கூட்டணி. அவர்களுக்கு ஸ்டாலின் பற்றிப் பேச தகுதி கிடையாது. தி.மு.க வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகி விட்டது. எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். தமிழகத்தில் இரக்கமற்ற ஆட்சி நடக்கிறது. தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு போடும் ஓட்டு, மோடி முகத்திலும், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் முகத்திலும் குத்துவது போல இருக்க வேண்டும். தி.மு.கவில் தேர்தல் அறிக்கைதான் கதாயநாயகன். தேர்தல் முடிவிற்குப் பிறகு ஆட்சி மாற்றம் வரும் என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க