பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி! | trying to kill the person who cheat without giving land near karaikudi

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (10/04/2019)

கடைசி தொடர்பு:08:50 (10/04/2019)

பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி!

காரைக்குடியில் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியவரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை முயற்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பாதரக்குடியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த குஞ்சுமுகம்மதிடம் குடிமராமத்து வேலை எடுத்துத் தருவதாக 3.5 லட்சம் பணம் வாங்கினார். தொடர்ந்து பணம் தராமல் ஏமாற்றி வந்தார். நேற்று காலை குஞ்சு முகம்மது காரைக்குடி ஆவுடைபொய்கை வந்து நின்றுகொண்டு முருகானந்தத்துக்கு போன் செய்திருக்கிறார். அவர் வந்ததும் அவருடை பைக்கில் காரைக்குடி நோக்கி வந்திருக்கிறார்கள். வரும் வழியில் இருவருக்கும் பணம் குறித்த வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம்  அடைந்த குஞ்சு முகம்மது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து முருகானந்தம் மீது ஊற்றிக் கொளுத்திவிட்டு தப்பித்துவிட்டார்.

மேலும், முருகானந்தம் ஓட்டி வந்த பைக் எரிந்தது. அவரது தலை, கை, கழுத்து முழுவதும் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தெரிந்து காரைக்குடி போலீஸார் குற்றவாளியான குஞ்சுமுகம்மதுவை  கைது செய்தனர். இந்த நிலையில், முருகானந்தம் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். முருகானந்தம், ஆட்சிக்கு ஏற்ப தன்னை அந்தக் கட்சிகளில் இணைத்துக்கொள்வார். குன்றக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க