மனைவிக்காக பாலகிருஷ்ணா ரெட்டி பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்படுமா?- நாளை தெரியும் | madras hc Verdict on balakrishna reddy case tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (10/04/2019)

கடைசி தொடர்பு:17:40 (10/04/2019)

மனைவிக்காக பாலகிருஷ்ணா ரெட்டி பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்படுமா?- நாளை தெரியும்

ஓசூர் இடைத்தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பிரசாரம் செய்ய தடை கேட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்தது.

சென்னை உயர்நீதிமன்றம்

1998-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனை தற்போது உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஓசூர் தொகுதியில் அவருடைய மனைவி ஜோதி போட்டியிடுகிறார். ஜோதிக்கு ஆதரவாக பாலகிருஷ்ணா ரெட்டி பிரசாரத்தில் ஈடுபட தடை கேட்டு அ.ம.மு.க வேட்பாளர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பாலகிருஷ்ணா ரெட்டி

 

இந்த மனு அவசர வழக்காக நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் பாலகிருஷ்ண ரெட்டி தன்னை வேட்பாளர் போல காட்டிக் கொள்வதாகவும், இதன் காரணமாக வேட்பாளர் யார் என்பதில் மக்களிடையே குழப்பம் ஏற்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாலகிருஷ்ணா ரெட்டி தன் மனைவியுடன் பிரசாரம் மேற்கொண்ட புகைப்பட ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டது. மனைவியுடன் கணவர் இருப்பது எந்த வகையில் குற்றமாகும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை நாளை ஒத்திவைத்தனர்.