`கழிப்பறை கட்டுவதற்கு இவர்கள் செய்த உதவி பெருசு!' - ஆசிரியர் சதீஷ்குமார் நெகிழ்ச்சி | government school teacher spent his money for student's toilet

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (10/04/2019)

கடைசி தொடர்பு:18:59 (10/04/2019)

`கழிப்பறை கட்டுவதற்கு இவர்கள் செய்த உதவி பெருசு!' - ஆசிரியர் சதீஷ்குமார் நெகிழ்ச்சி

தான் வேலை பார்க்கும் அரசுப் பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்கு தன்னுடைய விருதுப் பணம் 50,000 ரூபாயைக் கொடுத்தவர் ஆசிரியர் சதீஷ்குமார். இவர் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் எனும் ஊரின் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். இவர் கழிப்பறை கட்ட இருக்கிறார் என்பதை நம்முடைய விகடன் இணையதளத்தில் செய்தியாக பதிவிட்டிருந்தோம். கழிப்பறை கட்டுமிடத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை நம்மிடையே பகிர விரும்பினார். அவரிடம் பேசினோம்.

``புள்ளைங்களுக்கு தனித்தனியா கழிப்பறை வசதி இருக்கணும்னுதான் கழிப்பறை கட்ட திட்டமிட்டேன். மாணவ, மாணவியருக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் சேர்த்தே கழிப்பறை கட்டிட்டு இருக்கேன். கிட்டத்தட்ட 70% வேலை முடிஞ்சது. பல தரப்புகளிலிருந்து உதவி செஞ்சுட்டு இருக்காங்க. சரியான கழிப்பறை வசதி இல்லைங்குறதுனாலேயே அரசுப்பள்ளியில் மாணவிகள் படிப்பதற்கு தயங்குறாங்க. அவங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முதலில் செய்துகொடுக்கணும். முகம் தெரியாமல் உதவுபவர்களுக்கு நன்றி!

ஒருநாள் ஸ்கூல்ல கழிப்பறை மேற்பார்வை செஞ்சுட்டு இருந்தப்போ பிரகாஷ்னு ஒருத்தர் வந்தார். அவர் கூலி வேலை பார்க்கிறவர். தினக்கூலி வேலை பார்க்கிறவராக இருந்தாலும் அவர் ஒருநாள் சம்பாதிச்ச பணத்தை வைச்சு ஒரு மூட்டை சிமென்ட் வாங்கிட்டு வந்து கழிப்பறை கட்ட என்னால முடிஞ்ச உதவி ஐயான்னு சொல்லிக் கொடுத்துட்டுப் போனார். அதேமாதிரி,  எங்க ஸ்கூல்ல படிக்கிற பொண்ணோட அம்மா அவங்களும் கூலி வேலைதான் பார்க்குறாங்க. அந்தப் பொண்ணுக்கு அப்பா கிடையாது. அந்த அம்மா அவங்களுடைய ஒரு நாள் கூலி 80 ரூபாயை என்கிட்ட கொடுத்து என் புள்ளை கஷ்டப்படுற மாதிரி எந்தப் புள்ளைங்களும் கஷ்டப்படக்கூடாதுங்க சார்ன்னு சொல்லிட்டு போனாங்க. இந்த மாதிரி மனிதர்கள் இருக்கும்போது எங்களுடைய பள்ளி மட்டுமல்ல எல்லா அரசுப் பள்ளியிலுமே மாற்றம் என்கிற ஒன்று நிச்சயம் ஏற்படும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க