வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி! - ஆட்சியர் ஆய்வு | Karur Collector inspects election works

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (10/04/2019)

கடைசி தொடர்பு:22:00 (10/04/2019)

வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி! - ஆட்சியர் ஆய்வு

சின்னம் ஒட்டும் பணி

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்காளர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தலில் ஒரு வாக்காளர் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அவர் மட்டுமே பார்க்கும் வகையில் VVPAT(Voter Verified Papper Audit Trail) எனப்படும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. கரூர் மக்களவைத் தொகுதியில் 42 வேட்பாளர்களுக்கான சின்னம் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 43 சின்னங்கள் அடங்கிய காகித உருளைகளைப் பொருத்தும் பணி, அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் முன்னிலையில், அவரவர் அலுவலகங்களில் இன்று நடைபெற்றது.

சின்னம் ஒட்டும் பணி..

அந்த வகையில், கரூர் வட்டாட்சியர் அலுவலத்தில் கரூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்களில் சின்னங்கள் அடங்கிய காகித உருளை பொருத்தும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரசாந்த் குமார் ஆகியோர் இன்று (10.4.2019) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கரூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு 344 இயந்திரங்களும், கிருஷ்ணராயபுரம்(தனி) சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு 329 இயந்திரங்களும், அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு 329 இயந்திரங்களும், வேடச்சந்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு 399 இயந்திரங்களும், மணப்பாறை சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு 422 இயந்திரங்களும், விராலிமலை சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு 332 இயந்திரங்களும் என மொத்தம் 2,155 (கூடுதலாக இருப்பு வைத்துள்ளதும் சேர்த்து - Including Reserve) வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த இயந்திரங்களில் சின்னங்கள் அடங்கிய காகித உருளைகளைப் பொருத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.