‘காட்பாடியில் ரூ.32 லட்சம் பறிமுதல்!’ -வங்கி ஏஜென்சியிடம் அதிரடிகாட்டிய பறக்கும் படை | 'Rs.32 Lakhs seized in Katpadi! ‘ from bank agent

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (11/04/2019)

கடைசி தொடர்பு:07:30 (11/04/2019)

‘காட்பாடியில் ரூ.32 லட்சம் பறிமுதல்!’ -வங்கி ஏஜென்சியிடம் அதிரடிகாட்டிய பறக்கும் படை

காட்பாடி அருகே, வேனில் கொண்டுசெல்லப்பட்ட வங்கிக்கு சொந்தமான ரூ.32 லட்சத்தை உரிய ஆவணமில்லாததால்,  பறக்கும்படையினர் அதிரடியாகப் பறிமுதல்செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 32 லட்சம் ரூபாய்

வேலூரை அடுத்த காட்பாடியிலிருந்து கார்னாம்பட்டு செல்லும் சாலையில், பறக்கும்படையினர் 10-ம் தேதி இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வங்கி ஏஜென்சி வேனை மடக்கி சோதனைசெய்தனர். வேனில் கட்டுக்கட்டாக ரூ.71 லட்சம் இருந்தது. அவற்றில், எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ரூ.22 லட்சம், சிட்டி யூனியன் வங்கிக்கு சொந்தமான ரூ.15 லட்சம், ஆக்ஸிஸ் வங்கிக்கு கொண்டுசெல்லப்பட்ட எல்.ஐ.சி-க்கு சொந்தமான ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.39 லட்சத்துக்கான உரிய ஆவணங்கள் இருந்தன.

ஆனால், கரூர் வைஸ்யா வங்கிக்கு சொந்தமான ரூ.32 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல்செய்தனர். வருமான வரித் துறை சோதனைக்குப் பிறகு, வருவாய்த் துறை அதிகாரிகள்மூலம் அந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களிடம் மட்டும் கராராக நடந்துகொள்வதாக விமர்சனம் எழுந்த நிலையில், வங்கிக்கு சொந்தமான இவ்வளவு பெரிய தொகையைப் பறக்கும்படையினர் பறிமுதல் செய்யும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.