ஊருக்குள் வரவிடாமல் தடுத்த கிராம மக்கள் - பிரசாரம் செய்யாமல் திரும்பிய அரக்கோணம் பா.ம.க வேட்பாளர் | Election campaign, PMK candidate faces problem by village peoples

வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (11/04/2019)

கடைசி தொடர்பு:08:55 (11/04/2019)

ஊருக்குள் வரவிடாமல் தடுத்த கிராம மக்கள் - பிரசாரம் செய்யாமல் திரும்பிய அரக்கோணம் பா.ம.க வேட்பாளர்

அரக்கோணம் பா.ம.க வேட்பாளர்  ஏ.கே. மூர்த்தியை கிராமத்திற்குள் வரவிடாமல் தடுத்ததால், அவர் பிரசாரம் செய்யாமல் திரும்பிச் சென்றார். 

பிரசாரம் செய்ய வந்த பாமக வேட்பாளர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ளது, புது கீச்சலம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தில், கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான குடிநீர் பிரச்னை  இருந்துவருகிறது. ஏற்கெனவே, இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்னை இருந்துவருகிறது. இங்கு, அரக்கோணம் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் பா.ம.க-வைச் சேர்ந்த ஏ.கே.மூர்த்தி நிறுத்தப்பட்டுள்ளார்.

 நேற்று இவர், புது கீச்சலம் பகுதியில், திருத்தணி அ.தி.மு.க எம்.எல்.ஏ நரசிம்மன் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் பிரசாரம் செய்யச் சென்றார். அப்போது, கிராமத்திற்கு வெளியே அப்பகுதி மக்கள் அவர்களைத் தடுத்துநிறுத்தினார்கள். எம்.எல்.ஏ நரசிம்மனை கடுமையான வார்த்தைகளால் திட்டினார்கள். தண்ணீர் வசதிசெய்து கொடுக்காத நீங்கள், எங்கள் ஊருக்குள் பிரசாரம் செய்ய வரக் கூடாது என்றனர். ஊரே எதிர்த்ததால், பா.ம.க.வேட்பாளர் பிரசாரம் செய்யாமல் திரும்பிச் சென்றார். திருத்தணி உட்பட பல பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்னை இருந்துவருகிறது. தினமும் பொதுமக்கள் திருத்தணி  பி.டி.ஓ ஆபீஸை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.