இந்தியாவில் தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூகுள் செய்த ஒருவிரல் புரட்சி! | Google Doodle for india election

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (11/04/2019)

கடைசி தொடர்பு:12:20 (11/04/2019)

இந்தியாவில் தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூகுள் செய்த ஒருவிரல் புரட்சி!

உலக நாடுகளிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதன் மக்கள், தம்முடைய அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஒருவிரல் புரட்சிசெய்ய வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்கள். ஆம், இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கிவிட்டது. இன்று நடைபெறும் தேர்தல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏழு கட்டமாக, வரும் மே 19-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் நாள் அறிவித்ததிலிருந்து ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து அரசாங்கமும், காசுக்கு ஓட்டு போடக் கூடாது எனத் தனியார் அமைப்புகளும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். ஓட்டு போட்ட விரலை காண்பித்தால் 'விலையில் சலுகை' என்றெல்லாம் வியாபாரிகள் ஊக்கப்படுத்திவருகிறார்கள்.

ஆனால், ஒவ்வொரு தேர்தல் தினத்தன்றும், ஓட்டு போடாமல் அலட்சியம் செய்பவர்களும், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுபவர்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இருப்பினும், ஓட்டு போட வேண்டுமென்கிற விழிப்புணர்வு நம் அனைவருக்கும் இருந்தால் மட்டும்தான் நல்லதொரு மாற்றம் நிகழும். இந்தியாவில் இன்று தேர்தல் தொடங்கியிருப்பதை முன்னிட்டு, கூகுளும் தன் பங்கிற்கு ஒருவிரல் புரட்சி செய்திருக்கிறது.

கூகுள் ஒரு விரல் புரட்சி

இன்றைய கூகுள் டூடுல் பார்த்தால் அதைத் தெரிந்துகொள்ளலாம்.