`பிரச்னைக்கு என்ன தீர்வுன்னே யாரும் சொல்லமாட்றாங்க!' - அரசியல் கட்சியினர் குறித்து சேரன் வேதனை | director cheran worried about tn politics

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (11/04/2019)

கடைசி தொடர்பு:20:00 (11/04/2019)

`பிரச்னைக்கு என்ன தீர்வுன்னே யாரும் சொல்லமாட்றாங்க!' - அரசியல் கட்சியினர் குறித்து சேரன் வேதனை

தமிழக அரசியல் கட்சிகளின் பிரசாரம் குறித்து இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார்.

சேரன்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை வீடுவீடாக சென்று பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். மக்களின் தேவைகளை வாக்குறுதிகளாக அளித்து வருகின்றனர். நீட், ஸ்டெர்லைட், மீத்தேன் திட்டம் போன்ற தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப் பேசி வேட்பாளர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் ஏழு நாள்களே உள்ளதால் இறுதிக்கட்ட பிரசார வேலைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் பிரசாரம் குறித்து இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார்

சேரன்

பிரசாரத்தில் வாக்குறுதிகள் கொடுக்கும் கட்சிகளிடம் திட்டங்கள் குறித்து தெளிவான தகவல் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ``எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க.. யாரும் தீர்வை நோக்கி நகரவேயில்லை... பிரச்னைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை.. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும்.. யாரை நம்பி மாற்றம் தேடுவது... சாதாரண வாக்காளனாய் எனக்குத் தோன்றியது.

ட்விட்டர் பதிவு

மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மநீம, நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள்.. தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள்தானே.." எனக் குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க