பிரதமர் வேட்பாளரை கூற திராணி இல்லாத கூட்டணி - தி.மு.க - காங்கிரஸை விளாசும் விஜயபிரபாகரன் | vijaya prabakaran attacks DMK - congress alliance

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (12/04/2019)

கடைசி தொடர்பு:10:14 (12/04/2019)

பிரதமர் வேட்பாளரை கூற திராணி இல்லாத கூட்டணி - தி.மு.க - காங்கிரஸை விளாசும் விஜயபிரபாகரன்

விஜயபிரபாகரன்

விருதுநகர் மக்களவைத் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருதுநகரில் பிரசாரம் செய்தார். அப்போது, கேப்டன் விஜயகாந்த் பிறந்த ஊர் மதுரை. இதனால் மதுரை மஸ்த் என்னிடம் இருக்கிறது. நம் வேட்பாளருக்கு படிப்பு குறைவாக இருந்தாலும் மக்களுக்காக உழைப்பவர். தே.மு.தி.க சார்பாக இதுவரை யாரும் டெல்லி சென்றதில்லை. இந்த முறை தே.மு.தி.க வேட்பாளர் டெல்லி செல்ல மக்கள் வாக்களிக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு இருந்தால்தான் பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும். இந்தியா முழுவதும் மோடிக்கு ஆதரவு உள்ளது. எனவே, நண்பர்கள், உறவினர்கள், சமூக வலைதளங்களில் வரும் கருத்துக் கணிப்புகளை நம்பாமல் சிந்தித்து வாக்களியுங்கள்.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதபோது துரைமுருகன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளது. இது 2ஜியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம். 2ஜி வழக்கில் இருந்து தப்பிக்கவே இலங்கைத் தமிழர்களை கொலை செய்த காங்கிரஸுக்கு தி.மு.க உடந்தையாக இருந்தது. பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற திராணி இல்லாத தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதான் நமது கூட்டணியை எதிர்க்கிறது.

பாக்சிங் கற்று நம் நாட்டுக்காக விளையாடி பெருமை சேர்க்காமல் பிரியாணி கடைக்காரரை தாக்குவதற்காகவே தி.மு.க-வினர் பாக்சிங் கற்றுள்ளனர். சொந்த அண்ணனையே மதிக்காத ஸ்டாலின் எப்படி தமிழக மக்களை மதிப்பார். குடும்பத்தையே அவர் மதிக்கமாட்டார். ஓட்டு கேட்பது என் உரிமை. வாக்களிப்பது உங்கள் கடமை என்றார்.