பொன்.ராதா என் செல்போன் நம்பரை வாங்க முயற்சி செய்தார்! - உண்மைகளை போட்டுடைத்த தினகரன் | Pon.radhakrishnan tried to convince me, says Ttv dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (12/04/2019)

கடைசி தொடர்பு:13:10 (12/04/2019)

பொன்.ராதா என் செல்போன் நம்பரை வாங்க முயற்சி செய்தார்! - உண்மைகளை போட்டுடைத்த தினகரன்

பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதியில் எங்கள் கட்சியில் சிறுபான்மையினர் வேட்பாளர்களை நிறுத்துவதற்காக என்னிடம் பேச முயற்சி செய்தது உண்மைதான் என கும்பகோணத்தில் தினகரன் தெரிவித்தார்.

தினகரன்

அ.ம.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தினகரன் வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்து வருகிறார். பொன்.ராதாகிருஷ்ணன் என்னிடம் பேச முயற்சி செய்தார் என தினகரன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று சுவாமிமலையில் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது, ``பா.ஜ.கவைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவரை நான் பார்த்தது கூட கிடையாது. அவர் யாரென்றே என்றே எனக்கு தெரியாது. கருப்பு.முருகானந்தம், பொன்.ராதாகிருஷ்ணன் தினகரனிடம் பேச விரும்புகிறார் எனக் கூறி எனது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் எஸ்.காமராஜிடம் என்னுடைய செல்போன் நம்பரைக் கேட்டுள்ளார். ஆனால், எஸ்.காமராஜ், என்னிடம் கேட்டு விட்டு தருவதாகக் கூறி விட்டு என்னைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினார். ஆனால் நான், நீங்கள் என் நம்பரை  தரவேண்டாம் என்று கூறிவிட்டேன்.

பிறகு என்னுடைய உதவியாளர் ஜனாவிடம் நம்பர் கேட்டு விவரத்தை தெரிவித்து கருப்பு.முருகானந்தம் பேசியிருக்கிறார். அதில் கன்னியாகுமரியில் கிறிஸ்துவரையும், திருநெல்வேலியில் இஸ்லாமியரையும் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் நான்தான் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களிடம் அணுகினேன் என்று கருப்பு முருகானந்தம் மாற்றி பேசி வந்தவர். இப்போது ஜனாவிடம் பேசியதை ஒத்துக் கொள்கிறார். என்னுடைய கட்சியில் சேரவா கருப்பு எங்களிடம் பேசியுள்ளார். பொன் ராதாகிருஷ்ணன் எனக்கு நன்றாக தெரியும். பொன்.ராதாகிருஷ்ணன் பேச வேண்டும் என்று கருப்பு முருகானந்தம் நம்பர் கேட்டது உண்மை. இது வெளியில் சொல்வது நாகரிகம் இல்லை என்கிறார்கள். இன்னொரு கட்சியில் இஸ்லாமியரை, கிறிஸ்துவரை வேட்பாளராக நிறுத்துங்கள் என்று சொல்வது மட்டும் நாகரிகமான செயலா?

என்னிடம் பேசியதை மட்டும் நான் வெளியில் சொல்வது தவறு என்று கூறுவதுதான் தமிழ்நாட்டில் புது விதமான நாகரிகமா. பொன் ராதாகிருஷ்ணன், மற்றுமொறு முக்கிய நபர் மூலமாகவும் என்னுடைய நம்பரை கேட்டார். ஆனால் அவர் யார் பெயர் என்ன என்று சொல்ல மாட்டேன்.

நான் பா.ஜ.கவுடன் பேசியிருந்தால் அது குறித்து ஆதாரம் எதுவும் இருந்தால் தாராளமாக பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு. முருகானந்தம் உள்ளிட்டவர்களை அதை வெளியிடச் சொல்லுங்கள் பார்ப்போம் எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க