`செம்பருத்தி கதாநாயகன் பெயரும், என் பெயரும் ஒண்ணுதான்!'- பெண் வாக்காளர்களைக் கவரும் கார்த்தி சிதம்பரம் | Karti chidambaram election campaign in sivaganga

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (12/04/2019)

கடைசி தொடர்பு:16:40 (12/04/2019)

`செம்பருத்தி கதாநாயகன் பெயரும், என் பெயரும் ஒண்ணுதான்!'- பெண் வாக்காளர்களைக் கவரும் கார்த்தி சிதம்பரம்

`செம்பருத்தி சீரியலில் வரும் கதாநாயகன் பெயரும் என் பெயரும் ஒண்ணுதான்' என்று பெண்களிடம் சீரியல் கதைகளைப் பேசி வாக்கு சேகரித்துவருகிறார், கார்த்தி சிதம்பரம். இந்தப் பேச்சு, பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கார்த்தி சிதம்பரம் பிரசாரம்


சிவகங்கைத் தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். இவரை எதிர்த்து, பா.ஜ.க வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். இந்த இரண்டு தேசியக் கட்சியினரும் கடுமையான வெயில் கொடுமையையும் பொருட்படுத்தாமல்,  கிராமம் கிராமமாகச் சென்று வாக்காளர்களிடம் தங்கள் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைச் சொல்லி வாக்கு சேகரித்துவருகின்றனர்.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் தன்மீது மக்கள் மத்தியில் பதிந்திருக்கும் கெட்ட பெயரைப் போக்கும் விதமாக, மக்கள் மத்தியில் சகஜமாகப் பேசுகிறார் என்கிற இமேஜ் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, டி.வி சீரியலில் வரும் செம்பருத்தி நாடகத்தைப் பற்றி பெண்களிடம் பேசி, `அதில் வரும் நல்ல கேரக்டராக நடித்திருப்பவர் பெயரும் கார்த்தி தான். என்னுடைய பெயரும் கார்த்தி தான்' என்று பேசுகிறார். நீங்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும்போது, செம்பருத்தியில் வரும் கார்த்தி பெயர் தான் ஞாபகம் வரவேண்டும். நான் வெற்றி பெற்றால், கேபிள் கட்டணத்தை குறைப்பேன். நீங்கள் டி.வி சீரியல்களை சந்தோஷமாகப் பார்க்கலாம். அதோடு இல்லாமல் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மாதம்தோறும் ஆறாயிரம் வழங்கப்படும். சிலிண்டர் விலை பழையநிலைக்கு வந்துவிடும்' என்று பெண்கள் மத்தியில் பேசிவருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க