`உங்க வீட்டுக் காசுல இருந்தா கொடுத்தீங்க' - அ.தி.மு.க வேட்பாளரை அதிரவைத்த `100 நாள் வேலை பார்த்த பெண்கள் | women's opposes admk candidate in thiruporur

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (12/04/2019)

கடைசி தொடர்பு:18:06 (12/04/2019)

`உங்க வீட்டுக் காசுல இருந்தா கொடுத்தீங்க' - அ.தி.மு.க வேட்பாளரை அதிரவைத்த `100 நாள் வேலை பார்த்த பெண்கள்

வாக்கு சேகரிக்கச் சென்ற அ.தி.மு.க வேட்பாளரை கேள்விகளால் மக்கள் துளைத்தெடுத்துள்ளனர்.

அ தி மு க வேட்பாளர்

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க சார்பில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர். இந்தத் தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு, மக்கள் மத்தியில் எதிர்ப்புக்குரல் எழுந்துவருகிறது. ஆளும் கட்சி மீதான அதிருப்தி, பா.ஜ.க மற்றும் மோடி மீதான எதிர்ப்பலை ஆகியவற்றால், அக்கட்சி வேட்பாளர்கள் எதிர்ப்புகளை எதிர்கொண்டுவருகின்றனர். பல இடங்களில் அவர்களைக் கிராமங்களுக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றனர். சில இடங்களில், வேட்பாளர்களை கேள்வி கேட்டு அவர்களை மடக்குகின்றனர். இதுமாதிரி மீண்டும் ஒரு சம்பவமும் நடைபெற்றுள்ளது. 

அ.தி.மு.க வேட்பாளர்

திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளராக, திருக்கழுக்குன்றம் S. ஆறுமுகம் என்பவர் போட்டியிடுகிறார். இதற்காகத் தீவிர பிரசாரம் செய்துவருகிறார். இந்நிலையில், சமீபத்தில் கோட்டமேடு கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்த மக்களிடம் வாக்கு சேகரிக்கச் சென்றார் ஆறுமுகம். அப்போது, அங்கிருந்த பெண்கள் அனைவரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தனர். இருந்தும் விடாமல், ஆறுமுகம் ஆதரவாளர்கள் தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்தின் ரூ.1000 மற்றும் வறட்சி நிவாரண நிதி ரூ.2000 கொடுத்ததைச் சொல்லி வாக்கு கேட்க, அங்கிருந்த பெண்மணி ஒருவர், ``உங்க வீட்டுக் காசுல இருந்தா பொங்கலுக்கு 1000 ரூபா கொடுத்தீங்க... நாங்க வரி கட்டுறோம். அந்தக் காசுல இருந்துதானே எங்களுக்கு கொடுத்தீங்க. உங்க சொந்தக் காசுல இருந்து இல்ல" எனக் கடுமையாக வாதிட்டார். இதனால், அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டார் வேட்பாளர் ஆறுமுகம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க