`நண்பன் என்ற முறையில் வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன்!' - சு.வெங்கடேசனுக்காக பிரசாரம் செய்த சமுத்திரக்கனி | director samuthirakani election campaign in madurai

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (12/04/2019)

கடைசி தொடர்பு:18:20 (12/04/2019)

`நண்பன் என்ற முறையில் வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன்!' - சு.வெங்கடேசனுக்காக பிரசாரம் செய்த சமுத்திரக்கனி

`எழுத்தாளர் சு.வெங்கடேசனை வெற்றிபெறவைத்தால், மதுரைக்கு மிகப்பெரிய மாற்றம் வரும். மதுரை மக்களுக்கு நன்மை கிடைக்கும்' என்று, நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பரப்புரை செய்தார்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம்.வேட்பாளர்  சு.வெங்கடேசனை ஆதரித்து, மதுரை செல்லூர் பகுதியில் பேசிய சமுத்திரக்கனி, ``பரபரப்பான தேர்தல் களத்தை சந்திக்கிறோம். நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய தேர்தல். கட்சி உட்பட அனைத்தையும் கடந்து, நண்பனாக சு வெங்கடேசனுக்கு வாக்கு கேட்டு உங்கள் பகுதிக்கு வந்துள்ளேன். 

சமுத்திரக்கனி

முதல் தலைமுறை  வாக்காளர்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம், உங்களது  கைகளில்தான் இருக்கிறது. நீங்கள்தான் ஒட்டுமொத்த தலையெழுத்தை மாற்றப்போகிறீர்கள். எனவே, கவனமாக வாக்களியுங்கள். சு.வெங்கடேசன் போன்றவர்கள் வென்றால், மக்களுக்கு ஒரு எளிமையான தலைவன் கிடைப்பார்.

அந்த எளிமையான தலைவர், மக்களின் கூடவே இருந்து  பிரச்னைகளை பேசித் தீர்க்கக்கூடியவராக இருப்பார். மறைக்கப்படவிருந்த கீழடி நாகரிகத்தை,  'உலகில் தொன்மையான நாகரிகம் கொண்டவன்  தமிழன்' என உரக்கச் சொன்னவர். மதுரை வரலாற்றை 'காவல் கோட்டத்தில்' சொன்ன மாமனிதன்.' வேள்பாரி' போன்ற தொட முடியாத விஷயங்களை அனைவருக்கும் புரியவைத்த வெங்கடேசன் என்கிற அற்புதமான மனிதரைத் தேர்ந்தெடுத்தால், மதுரைக்கு மிகப்பெரிய மாற்றம் வரும். அடுத்த தலைமுறை சிறப்பாக மலரும்'' என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க