`தேர்தலுக்குப் பின்னும் மக்களுடன் தொடர்பில் இருப்பேன்!' - மதுரை அ.தி.மு.க வேட்பாளரின் `டெக்' பிரசாரம் | madurai admk candidate's new method of campaign

வெளியிடப்பட்ட நேரம்: 21:33 (12/04/2019)

கடைசி தொடர்பு:21:33 (12/04/2019)

`தேர்தலுக்குப் பின்னும் மக்களுடன் தொடர்பில் இருப்பேன்!' - மதுரை அ.தி.மு.க வேட்பாளரின் `டெக்' பிரசாரம்

`மதுரை வாக்காளர்கள் எனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும், நான் என்ன செய்வேன், என்ன மாதிரியான பிரச்னைகள், தேவைகளை  தொலைபேசிமூலம் இப்போதே என்னிடம் கேட்கலாம். அதற்கு நான் பதில் சொல்வேன் '' என்று, தொலைபேசி  எண்ணையும், வாட்ஸ்அப், மெயில் ஐடி ஆகியவற்றை வெளியிட்டு, மக்களைக் கவரும் வகையில் தேர்தல் பிரசாரத்தை நடத்திவருகிறார் அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்யன்.

ராஜ் சத்யன்

மதுரை நாடாளுமன்றத் தேர்தல் நாள் நெருங்கநெருங்க அ.தி.மு.க - தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் பிரசாரத்தை தீவிரமாக்கியுள்ளார்கள். அதிலும், மக்களை எப்படியெல்லாம் கவரலாம் என்று யோசித்து யோசித்து வேலைசெய்கிறார்கள். 

சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்காக எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் வருகைதந்து பிரசாரம் செய்துவருகிறார்கள். செல்ஃபி வித் சு.வெ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். டிஜிட்டல் பிரசாரம் செய்தார்.  அதேபோல, அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்யனுக்காக நடிகர் சரத்குமார், கார்த்திக் ஆகியோர் பிரசாரம் செய்தார்கள். மதுரை வந்த நடிகை கஸ்தூரி, 'ராஜ்சத்யன் எனது நண்பர், அவர் தேர்வுசெய்யப்பட்டால், மதுரை மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்கும்'  என்று செய்தியாளர்களிடம் கூறிவிட்டு சென்றது, ராஜ் சத்யனுக்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது. 

இந்தநிலையில், மதுரை மக்களவைத் தொகுதி மக்கள், தன்னுடன் எப்போதும் தொடர்புகொள்ள தொலைபேசி எண், வாட்ஸ்அப், மெயில் ஐ.டி-ஐ வெளியிட்டுள்ளார். இது இப்போது மட்டுமல்ல, வெற்றிபெற்ற பின்பும் தொடர்ந்து இயங்கும் என்று கூறியுள்ளார். அ.தி.மு.க-வில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக இருப்பதால், அந்த அணியில் உள்ளவர்களை இந்தப் பணியில் இறக்கி விட்டுள்ளார்.  மக்களைக் கவர காசு பணம் மட்டும் போதாது, டெக்னாலஜியுடன் இணைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார்கள். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க