கலர் டி.வி கொடுத்ததுபோல 6,000 ரூபாயும் கொடுப்போம் வசந்தகுமார் பேட்டி! | Election 2019

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (12/04/2019)

கடைசி தொடர்பு:21:30 (12/04/2019)

கலர் டி.வி கொடுத்ததுபோல 6,000 ரூபாயும் கொடுப்போம் வசந்தகுமார் பேட்டி!

''காங்கிரஸ் கட்சியும் தி.மு.க-வும் சொல்வதைத்தான் செய்வோம். கலர் டி.வி கொடுப்போம் என்றோம், அதுபோல கொடுத்தோம். இப்போது  6,000 ரூபாய் கொடுப்போம் என்கிறோம், அதுபோல கொடுப்போம்'' என கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தெரிவித்தார்.

வசந்தகுமார்

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராகுல் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தே தீரும். தமக்குப் பிடிக்காதவர்கள் யார் வளர்ந்தாலும் அவர்களை அழிக்கும் எண்ணம் மோடிக்கு உண்டு. அதைத்தான் குஜராத்தில் செய்தார். இப்போது ராகுல் காந்தி வளர்ந்துவிடுவார், அவர் பிரதமர் ஆகிவிடுவார் என்பதால், அதுபோன்று திட்டம் போடுவார்கள். ஆனால், இறைவன் அருளால் ராகுல் நூறாண்டுகாலம் வாழ்வார். காங்கிரஸ் கட்சியும், தி.மு.க-வும் சொல்வதைத்தான் செய்வோம்.

வசந்தகுமார்

கலர் டி.வி கொடுப்போம் என்றோம், அதுபோல கொடுத்தோம். இப்போது 6,000 ரூபாய் கொடுப்போம் என்கிறோம், அதுபோல கொடுப்போம். பொன்.ராதாகிருஷ்ணன், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால்தான், போட்டியிலிருந்து விலக வேண்டும் எனக் கூறுகிறேன். தோல்வி பயத்தால் அல்ல. ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கித்தருவதாக ஐந்து ஆண்டுகள் போராட்டம் நடத்தினர். அவர் அதை வாங்கித் தரவில்லை. அவர் செய்யவில்லையே... அதனால்தான் போட்டியில் இருந்து விலகச் சொன்னேன்" என்றார்.