`மூப்பனார் பெயரில் கல்லூரி!' - தி.மு.க வேட்பாளர் அறிவிப்பால் அதிர்ந்த த.மா.காவினர் | Will establish new college in Moopanar's name, announces Tanjore DMK Candidate Palanimanickam

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (12/04/2019)

கடைசி தொடர்பு:21:40 (12/04/2019)

`மூப்பனார் பெயரில் கல்லூரி!' - தி.மு.க வேட்பாளர் அறிவிப்பால் அதிர்ந்த த.மா.காவினர்

திருவையாறில், மூப்பனார் பெயரில் கல்லுாரி அமைக்கப்படும் என தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க.,வேட்பாளர் பழனிமாணிக்கம் பிரச்சாரத்தில் அறிவித்ததையடுத்து அதிர்ந்த த.மா.கா.வினர், அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

த.மா.கா நிர்வாகிகள்

தஞ்சாவூர் த.மா.கா.,அலுவலகத்தில், மாநில துணைத் தலைவர் கோவை தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் மூப்பனார் மற்றும் பி.எல்.ஏ.சிதம்பரம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது,
``தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்ப்பட்ட திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க., நாடாளுமன்ற வேட்பாளர் பழனிமாணிக்கம்,பிரசாரத்தில் ஈடுப்பட்ட போது, இப்பகுதியில் ஜி.கே.,மூப்பனார் பெயரில் கல்லுாரி அமைக்கப்படும் என அறிவித்தார். இவர் ஐந்து முறை எம்.பி.,யாக இருந்துள்ளார். இதில் இரண்டு முறை மத்திய நிதியமைச்சராகவும் இருந்துள்ளார். 

ஜி.கே.மூப்பனார் இறந்து 19 ஆண்டுகள் கடந்து விட்டன. அப்போது பதவியில் இருந்த பழனிமாணிக்கத்திற்கு வராத அக்கறை, இப்போது ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்தில் ஜி.கே.மூப்பனாருக்கு உள்ள செல்வாக்கை முன்நிறுத்தி அதனை தனக்கான வாக்கு வங்கியாக மாற்ற திசை திருப்பி பெற்று விடலாம் என்கிற உள்நோக்கத்தோடு இதனை அறிவித்துள்ளார். இது ஏற்புடையது அல்ல. 

த.மா.கா நிர்வாகிகள்

இவர் நிதியமைச்சராக இருந்த போது தஞ்சையில் இருந்து சென்னைக்கு ரயில் திட்டங்களை ஏற்படுத்தி தர முடியவில்லை. மேரீஸ்கார்னர் ரயில்வே மேம்பாலம் கூட அ.தி.மு.க.,ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் எந்த ஒரு வேலையும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கடன் ரத்து, விவசாயிகள் அபிவிருத்தி திட்டம்,தொழில் வளர்ச்சி போன்றவற்றை பழனிமாணிக்கம் பதவியில் இருந்த போது ஏற்படுத்தி தரவில்லை. அதனால் அவர் இந்த தேர்தலில்  தோல்வியை தழுவுது உறுதியாக உள்ளது'' என தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க