தி.மு.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி! - சரத்குமார் தாக்கு | dmk alliance is an opportunist alliance, says sarathkumar

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (12/04/2019)

கடைசி தொடர்பு:23:00 (12/04/2019)

தி.மு.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி! - சரத்குமார் தாக்கு

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, கேரளாவில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலையில் இருப்பதே தி.மு.க அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாதம் என்பதற்கான உதாரணம் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

சரத்குமார்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில், பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது, ``அ.தி.மு.க உருவாக்கியிருப்பது மெகா கூட்டணி; வெற்றிக்கூட்டணி . இந்தியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் தரும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்குப் பதிலடி கொடுப்பதற்கு மோடிதான் பிரதமராக வர வேண்டும்.

ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் கம்யூனிஸ்ட்டுகளுடன் ஆதரவாகவும், வயநாடு  தொகுதியில் கம்யூனிஸ்ட்டுகளை எதிர்த்தும் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவாகவும், கேரளாவில் எதிராகவும் உள்ளன. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்பதற்கு உதாரணம் இது. நிலக்கரி ஊழல், 2-ஜி அலைக்கற்றை ஊழல் போன்ற பல ஊழல்களில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஈடுபட்டுள்ளது. தேர்தல், மிக முக்கியமான நாள். நல்ல தலைமை இருந்தால்தான் பல நலத்திட்டங்கள் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.