`அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி; பொங்கலூர் பழனிசாமிக்கு சூலூர்!' - 4 தொகுதி தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு | DMK announces 4 constituency by election candidates

வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (13/04/2019)

கடைசி தொடர்பு:12:42 (13/04/2019)

`அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி; பொங்கலூர் பழனிசாமிக்கு சூலூர்!' - 4 தொகுதி தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் 18 தொகுதிகள் தவிர மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தி.மு.க அறிவித்திருக்கிறது. 
 

ஸ்டாலின்

தமிழகத்தில் மொத்தம் காலியாக 22 தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்தநிலையில், அந்தத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்குகள் எண்ணப்பட்டு மே 23-ல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

செந்தில் பாலாஜி

இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தி.மு.க தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியும் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றத்தில் கடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணனும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் சண்முகையாவும் போட்டியிட இருப்பதாகத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அ.தி.மு.க தரப்பில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.