புதுக்கோட்டை பேரையூர் நாகநாதர் கோயில் தேரோட்டம் | pudukkottai naganathar temple festivel

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (14/04/2019)

கடைசி தொடர்பு:12:30 (14/04/2019)

புதுக்கோட்டை பேரையூர் நாகநாதர் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் வடம்பிடித்துத் தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்

பேரையூரில் உள்ள பிரகதாம்பாள் உடனுறை நாகநாதர் கோயில் பங்குனித் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து  ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடைபெற்றது. நாகநாதர் கோயிலில் இருந்து  தேர் புறப்பட்டது. கோயில் ஊரணியைச் சுற்றி வந்த தேரை அங்குத் திரண்ட பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.