எந்தக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அதிக சொத்து! - ஆய்வில் தகவல் | Which political parties having high assets candidate

வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (15/04/2019)

கடைசி தொடர்பு:14:54 (15/04/2019)

எந்தக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அதிக சொத்து! - ஆய்வில் தகவல்

எந்தக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அதிக சொத்து! - ஆய்வில் தகவல்

நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் நிற்கும் வேட்பாளரின் சொத்து விவரம் மற்றும் அவருடைய ஒழுக்கப் பின்னணி குறித்து Association for Democratic Reforms என்கிற அமைப்பினர் ஆய்வு செய்து அதன் அறிக்கையை தங்களுடைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் கடந்த இருபது வருடங்களாகத் தேர்தல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்கள். அதன்படி தமிழகத்தில் நாற்பது தொகுதிகளிலும் வேட்பாளராக நிற்கிறவர்களைக் கட்சி வாரியாகப் பிரித்து அவர்களின் சொத்துமதிப்பைக் கணக்கிட்டு வரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.

கூட்டணி

அதன்படி தமிழகத்தில் உள்ள இருபெரும் கூட்டணிக் கட்சிகளில், தி.மு.க கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள்தாம் அதிக சொத்து உள்ளவர்கள் என்று தெரிய வந்திருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் 24 தொகுதிகளிலும் நிற்கும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு சராசரிப்படி ஒருவருக்கு 25.91 கோடி என இருக்கிறது. தி.மு.க வேட்பாளர்கள் ஜெகத்ரட்சகன் 114 கோடி, பாரிவேந்தர் 97.27 கோடி, என முன்னணியில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தி.மு.க கூட்டணியிலும் அதிக சொத்து கொண்ட வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் நிற்கும் எச்.வசந்தகுமார் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 417 கோடி. இதெல்லாம் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட கணக்குகளின் அடிப்படையில் வெளிவந்திருக்கும் சொத்து மதிப்பு மட்டுமே.