`3 நாள் சோதனை, முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!'- கட்டுமான நிறுவனர் வீடு, ஆபீஸில் ஐ.டி சோதனை நிறைவு | Income tax officials finish raid at namakkal psk groups

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (15/04/2019)

கடைசி தொடர்பு:17:20 (15/04/2019)

`3 நாள் சோதனை, முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!'- கட்டுமான நிறுவனர் வீடு, ஆபீஸில் ஐ.டி சோதனை நிறைவு

நாமக்கல்லை அடுத்த நடுக்கோம்பையில் உள்ள பி.எஸ்.கே கட்டுமான நிறுவன உரிமையாளர் பெரியசாமியின் வீடு மற்றும் அலுவலகங்களில் மூன்று நாள்களாக நடந்த வருமான வரித் துறை சோதனை, இன்று அதிகாலை நிறைவடைந்தது.

ஐடி சோதனை நடந்த வீடு

 

சேந்தமங்கலத்தை அடுத்த நடுக்கோம்பையில் உள்ள பி.எஸ்.கே நிறுவனத்தின் அலுவலகம், நூற்பு ஆலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில், கடந்த 12-ம் தேதி அதிகாலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் நடுக்கோம்பை பகுதியில் உள்ள அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர் பெரியசாமி வீடு மற்றும் நாமக்கல், சேலம் சாலையில் உள்ள பி.எஸ்.கே குழுமத்தின் உறவினர் செல்வம் என்பவரின் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் குழுக்களாக வருமான வரித்துறையினர் நடத்திய தொடர் சோதனை, இன்று அதிகாலை நிறைவடைந்தது.

இந்தச் சோதனையில், முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், 14 கோடியே 18 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பணப்பட்டுவாடாவுக்கான பணம் பதுக்கல் என்ற தகவலின் அடிப்படையிலேயே சோதனை நடந்ததால், இது யாருடைய பணம் என்பதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. பெரியசாமிக்கு சம்மன் அனுப்பியும் விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க