பணம் வேணாம். உங்க ஆசீர்வாதம் போதும்னு சொன்னா! - ரித்தீஷ் மனைவிக்காகக் கலங்கும் ஜெயந்தி கண்ணப்பன் | A.L. Srinivasan daughter in law speak about j.k.rithesh's wife

வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (15/04/2019)

கடைசி தொடர்பு:17:32 (15/04/2019)

பணம் வேணாம். உங்க ஆசீர்வாதம் போதும்னு சொன்னா! - ரித்தீஷ் மனைவிக்காகக் கலங்கும் ஜெயந்தி கண்ணப்பன்

றைந்த நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி,  கையில் குழந்தையுடன் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று கண்ணில்பட்டதும், ஜெயந்தி கண்ணப்பனை உடனே தொடர்பு கொண்டோம். 

 

ரித்தீஷ் மனைவி

 

``என் வீட்டுப் பெண் குழந்தை மாதிரிதான் அவளும். அவ மூணாவது குழந்தை உண்டாகி இருந்தப்போகூட, `அம்மா நான் கன்சீவா இருக்கேன்'னு எனக்குத் தகவல் சொன்னா. கலைஞர் காவேரி ஹாஸ்பிட்டலில் இருந்தப்போ அவரைப் பார்க்கிறதுக்காக நானும் ராஜஶ்ரீயும் போயிருந்தோம். அவரைப் பார்த்துட்டு கீழே இறங்கி வந்துட்டு இருந்தேன். அம்மான்னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தா ஜோதி. தன் கைக்குழந்தைக்கு தடுப்பூசி போட வந்திருந்தா. குழந்தைக்குப் பணம் கொடுத்து நான் ஆசீர்வாதம் பண்ண முயற்சி செய்தப்போகூட, `பணமெல்லாம் வேணாம்மா. உங்க ஆசீர்வாதம் மட்டும் போதும்மா'ன்னு என் கையைப் பிடிச்சுக்கிட்டா. 

அதுக்கப்புறம், மதுரையில் நடந்த என் சம்பந்தி வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தா. இன்விடேஷன் வைச்ச மரியாதைக்காகவே கைக்குழந்தையைத் தூக்கிட்டு ஃபிளைட்டில் வந்துட்டுப் போனா. 

எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாத துன்பம் இது. ரித்தீஷை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவ. மூணு குழந்தைங்க இருந்தாலும் அவளே ரொம்ப சின்னப் பொண்ணுதான். ஒரு குழந்தைக்கு அப்பாவுடைய முகமே தெரியாமப் போச்சு. மூணு குழந்தைகளோட இனிமே அந்தப் பொண்ணு என்ன செய்யப் போறாள்னே தெரியலையே...'' என்றவரின் குரலில் விவரிக்க முடியாத வேதனை இழையோடியது.