`சசிகலா சிறையில் இருக்க வேண்டும் என்பதே தினகரன் எண்ணம்!' - ராஜேந்திரபாலாஜி | Minister rajendra balaji slams TTV Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (15/04/2019)

கடைசி தொடர்பு:18:15 (15/04/2019)

`சசிகலா சிறையில் இருக்க வேண்டும் என்பதே தினகரன் எண்ணம்!' - ராஜேந்திரபாலாஜி

'சசிகலா சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம்' என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவாக, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மக்களவைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்துவருகிறார். இந்நிலையில், விருதுநகர் நகர்ப்பகுதியில் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது, ``யார் பக்கம் தொண்டர்கள் உள்ளார்கள். யார் பக்கம் குண்டர்கள் உள்ளார்கள் என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 23-ம் தேதி தெரியும். சசிகலாவால்  துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், தேர்தல் பிரசாரத்தில் சசிகலா பெயரையே பயன்படுத்தவில்லை. சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டுவர தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுயநலத்தோடு செயல்பட்டுவருகிறார். கட்சியினரை அவர் ஏமாற்றி அரசியல் நடத்திவருகிறார். சசிகலா சிறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம். எந்த கட்சியாக இருந்தாலும், தான் தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தினகரன்'' என்று தெரிவித்தார்.