ராகுலின் கேள்விக்கு மோடி இன்னும் பதில் சொல்லவில்லை! - உம்மன் சாண்டி குற்றச்சாட்டு! | Election 2019 - oommen chandy slams Modi

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (15/04/2019)

கடைசி தொடர்பு:19:15 (15/04/2019)

ராகுலின் கேள்விக்கு மோடி இன்னும் பதில் சொல்லவில்லை! - உம்மன் சாண்டி குற்றச்சாட்டு!

'ரஃபேல் விவகாரத்தில், ராகுலின் கேள்விக்கு பிரதமரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை' என கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

உம்மன் சாண்டி


கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, மார்த்தாண்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உம்மன் சாண்டி,  "மத்தியில் மோடி ஐந்து ஆண்டுகளாக மக்களுக்கு நெருக்கடி கொடுத்தார். எனவே, இந்தியாவில் ராகுல் தலைமையில்  மதச் சார்பற்ற அரசு அமையும். வலுவான ஜனநாயக நாட்டை கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கவைத்தது மோடி அரசு.

உம்மன் சாண்டி

மோடி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில், பெரும் மெஜாரிட்டியுடன் ராகுல் காந்தி வெற்றிபெறுவார். ரஃபேல் விவகாரத்தில், ராகுலின் கேள்விக்கு பிரதமரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு வரிச்சலுகை அறிவித்தது புதிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை மோடி அரசு பின்னணியிலிருந்து இயக்குகிறது" என்றார்.