டி ஷர்ட்டில் உங்கள் மகள்/மகன் பெயரை பெயின்ட் செய்வது எளிது! | t-shirt painting techniques

வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (16/04/2019)

கடைசி தொடர்பு:12:47 (16/04/2019)

டி ஷர்ட்டில் உங்கள் மகள்/மகன் பெயரை பெயின்ட் செய்வது எளிது!

கார்ட்டூன் உருவங்களை டி ஷர்ட்டில் வரைகிறீர்கள் எனில் பெயின்ட் செய்த பின் ஏழு நாள்களாவது டி- ஷர்ட்டினைக் காயவைப்பது அவசியம்.

டி ஷர்ட்டில் உங்கள் மகள்/மகன் பெயரை பெயின்ட் செய்வது எளிது!

ஆன்லைனில் விற்கப்படும் நம் பெயர் எழுதிய டி ஷர்ட்டுகள் அதிக விலையில் விற்கப்படுகிறது. ஒரு டி - ஷர்ட், கொஞ்சூண்டு பெயின்ட் இருந்தால் போதும்  உங்கள் பெயர், நீங்கள் எழுத விரும்பும் பெயர், உங்கள் குழந்தைகளின் பெயரை எழுதி உங்களுக்குப் பிடித்தவர்களை அசத்தலாம். வாருங்கள் அந்த எளிதான கலையைக் கற்றுக்கொள்ள... சென்னயைச் சேர்ந்த சஹானா அதைச் சொல்லித்தருகிறர்.அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு பெயர்கள், கார்ட்டூன்கள், பூக்கள் என உங்கள் கற்பனைத்திறனுக்கு பெயின்டிங் செய்து அசத்துங்கள்.

தேவையானவை :

டி - ஷர்ட் பெயின்ட்

 

ப்ளைன் டி- ஷர்ட் - 1

நியூஸ் பேப்பர் - 1

பிரெஷ் - ஃப்ளாட் வ்ட் பிரெஷ் ( 3,6 ம் நம்பர்களில்) ரவுண்டு பிரெஷ் - ( 5 நம்பர் )

பென்சில்

ஸ்கேல்

ஏ4 பேப்பர் - 1

அக்ரலிக் பெயின்ட் - விரும்பிய நிறங்களில் 

செய்முறை :

ஸ்டெப் - 1 :

நீங்கள் எழுதப்போவது புது டி-ஷர்ட் எனில் தண்ணீரில் நனைத்து வெயிலில் காயவைத்துக்கொள்ளவும்.

ஸ்டெப் - 2 :

பெயின்டிங்

 

டி- ஷர்ட்டில் நீங்கள் பெயர் எழுதப்போகும் இடத்தை மற்ற இடங்களிலிருந்து தனித்துக் காட்ட முதலில் பேக்ரவுண்டு கலர் கொடுக்க வேண்டும். இதற்குப் பெயர் எழுதப்போகும் இடத்தை முதலில் பென்சிலால் மார்க் செய்து கொள்ளவும் அந்த இடத்தில் நீங்கள் விரும்பும் நிறத்தை பெயின்ட் செய்து கொள்ளவும். பேக் ரவுண்டு பெயின்ட் செய்கிறீர்கள் எனில் பெயின்டுடன் சற்று தண்ணீர் கலந்து பெயின்ட் செய்வது அவசியம்.

ஸ்டெப் - 3:

பேக் ரவுண்ட் வரைந்த பின் டி-ஷர்ட்டை பத்து நிமிடம் காயவிடவும்.

ஸ்டெப் - 4 :

இனி உங்களுக்கு விருப்பமான பெயர்களை டி - ஷர்ட்டில் பெயின்ட் செய்யலாம். எனக்கு ஸ்டைலாக எழுத வராதே என்பவர்கள்.... நீங்கள் விரும்பும் பெயரை ஆன்லைனில் தேடி பிரின்ட் அவுட் எடுக்கவும். வரைய விரும்பும் இடத்தில் மஞ்சள் கார்பன் பேப்பரை வைத்து அதன் மீது பிரின்ட் அவுட் வைத்து டி-ஷர்ட்டில் டிரேஸ் எடுக்கவும். பிறகு, அதன் மேலேயே நீங்கள் தடுமாற்றம் இல்லாமல் எழுதலாம். எழுதத் தெரிந்தவர்கள் பேக் ரவுண்டு செய்யப்பட்ட இடத்தில் விருப்பமான பெயரை எழுதவும்.

ஸ்டெப் - 5 :

டி ஷர்ட் பெயின்டிங்

 

 டி-ஷர்ட் உள்ளே பேப்பர் வைக்கவும். அப்போதுதான் பெயின்ட் செய்யும்போது மற்ற பகுதிகளில் படாமல் இருக்கும்.

ஸ்டெப் - 6 :

பென்சிலால் பெயர் எழுதியுள்ள இடத்தில் ரவுண்டு பிரெஷ் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் நிறத்தில் பெயரை எழுதி, பத்து நிமிடங்கள்  காயவிடவும்.

ஸ்டெப் - 7 :

ஏற்கெனவே பயன்படுத்திய நிறத்திற்கு கான்ட்ராஸ்டான நிறத்தைப் பயன்படுத்தி பெயரை டபுள் கோட்டிங் செய்து, ஒரு மணிநேரம் காயவைக்கவும்.

ஸ்டெப் - 8:

உங்கள் குழந்தையின் பெயர் எழுதப்பட்ட அட்டகாசமான டி- ஷர்ட் தயார்

டிப்ஸ் :

முதல் முதலாக டி- ஷர்ட் பெயின்டிங் செய்கிறீர்கள் எனில், பிரெஷ்ஷைப் பயன்படுத்தி முதலில் பேப்பரில் வரைந்து பார்த்த பின் டி-ஷர்ட்டில் முயலலாம்.

கார்ட்டூன் உருவங்களை டி-ஷர்ட்டில் வரைகிறீர்கள் எனில், பெயின்ட் செய்த பின் ஏழு நாள்களாவது  டி- ஷர்ட்டினைக் காயவைப்பது அவசியம்.

பெயின்ட்டால் தவறாக எழுதிவிட்டால் உடனே தண்ணீர் தொட்டு அழிப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். இதனால் பெயின்ட் மற்ற இடங்களில் பரவி டி-ஷர்ட்டின் அழகையே கெடுத்துவிடும். எனவே கவனமாக எழுதவோ வரையவோ வேண்டும்.

நீங்கள் பெயர் எழுதி இருக்கும் இடத்தை ஒரு வெள்ளை பேப்பரால் மறைத்துக் கொண்டு மற்ற இடங்களில் ஒரு பிரெஷ் பயன்படுத்தி பெயின்ட்டை லேசாகத் தெளித்துவிட்டால் டி- ஷர்ட் கலர்ஃபுல்லாக இருக்கும்.

தேவைப்படுபவர்கள் கிளிட்டர் பெயின்ட்டால் டி-ஷர்ட்டை டெக்கரேட் செய்து கொள்ளலாம்.

 


டிரெண்டிங் @ விகடன்