`இரண்டு பேரால்தான் கூட்டணியில் நாங்கள் சேர்ந்தோம்!'- பிரசாரத்தில் அன்புமணி ஓப்பன்டாக் | Election campaign anbumani ramdoss at namakkal

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (16/04/2019)

கடைசி தொடர்பு:14:20 (16/04/2019)

`இரண்டு பேரால்தான் கூட்டணியில் நாங்கள் சேர்ந்தோம்!'- பிரசாரத்தில் அன்புமணி ஓப்பன்டாக்

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து, ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பிரசாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அன்புமணி, `அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமைவதற்கு ராமதாஸூக்குப் பெரும் பங்கு உண்டு. அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் இல்லாவிட்டால் இந்தக் கூட்டணி அமைந்திருக்காது.

அன்புமணி பிரசாரம்

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பிரதமர் மோடி, முதலமைச்சர், துணை முதலமைச்சர், ராமதாஸ், விஜயகாந்த் உட்பட அனைவரும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஸ்டாலின் கூட்டணியில் பெரும் முதலாளிகளும், சாராய அதிபர்களும்தான் உள்ளனர். ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியாது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், தொலைநோக்கு திட்டங்கள் கிடைக்கவும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யக்கூடிய எங்களால்தான், கொடுக்கும் வாக்குறுதிகள், திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

மேட்டூர் உபரி நீர் திட்டத்தால் சேலம் மாவட்டம் பசுமையாக மாறும். ராசிபுரம், தலைவாசல், திருச்செங்கோடு பகுதிகள் இதனால் பயனடையும். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி அறிவித்துள்ளது. கோதாவரியில் ஆண்டுக்கு 1500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது. ஆயிரம் டிஎம்சி தண்ணீரை எடுத்து தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டிற்குக் கிடைப்பது 200 டிஎம்சிதான். ஜிஎஸ்டி வரியை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க