`40 ஆண்டுகளாக பா.ஜ.க-வை எதிர்த்திட்டு இருக்கேன்..!’ - ஆவேசமடைந்த கமல் | kamal at namakkal in election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (16/04/2019)

கடைசி தொடர்பு:15:40 (16/04/2019)

`40 ஆண்டுகளாக பா.ஜ.க-வை எதிர்த்திட்டு இருக்கேன்..!’ - ஆவேசமடைந்த கமல்

`40 ஆண்டுகளாக பா.ஜ.க-வைப் பற்றிக் கூறி வருகின்றேன். மோடி என்றும் பி.ஜே.பி என்றும் சொன்னால்தான் தெரியுமா? ' எனக் கமல் பா.ஜ.கவைப் பற்றி விமர்சித்தார்.

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் தங்கவேலுவை ஆதரித்து, நாமக்கல் பூங்கா சாலை மற்றும் திருச்செங்கோட்டில் நேற்று பிரசாரம் செய்தார் மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன். `40 ஆண்டுகளாக ஹேராம் படத்தில் நடித்ததிலிருந்து பா.ஜ.கவையும், மோடியையும் எதிர்த்து வருகிறேன்' என்று ஆவேசமாகப் பேச தொடங்கினார் கமல்ஹாசன்.

 

கமல்

`கட்சிக்கு ஒரு தொலைக்காட்சி உள்ளது நம்மை காட்டமாட்டார்கள். நம்மை காட்ட வேண்டிய நாள் ஏப்ரல் 18 தேதி. நானும் நீங்களும் கடந்த முறை அன்பு மழையில் நனைந்தோம். காசு வாங்காமல் இந்த மாதிரி கூட்டத்தை இங்கிருக்கும் இரண்டு  கழகங்களாலும் கூட்ட முடியாது. நம்பிக் கொடுத்தோம் ஏமாற்றி விட்டார்கள். தமிழகத்தில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க அக்கறை காட்டாத அ.தி.மு.க அரசு, டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்த அரசை அகற்ற வேண்டும். அதுவே, மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், ஒரு வித்தியாசமான தேர்தல். இந்தத் தேர்தலில் மக்கள் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும். 

நான் இப்பொது சொல்லுகின்றேன். நான் நடித்த ஹேராம் படம் பாருங்கள், 40 ஆண்டுகளாக பா.ஜ.கவைப் பற்றிக் கூறி வருகின்றேன். மோடி என்றும் பி.ஜே.பி என்றும் சொன்னால்தான் தெரியுமா? எனக் கேள்வி எழுப்பினார். மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச்லைட்டுக்கு நீங்கள் வாக்களிக்கும் போது, அது சரியாக பதிவாகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். வேறு கட்சிக்கு பதிவானால், உடனடியாக வாக்குப்பதிவு இயந்திரத்திலிருந்து கையை எடுக்காமல், வாக்கு சாவடி அலுவலரை அழைத்து பிரச்னையைக் கூறவேண்டும். தேசத்தை நகர்த்தும் முக்கியமான இந்தத் தேர்தலில், அனைவரும் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட காவல்துறை போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் எனக்கு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி அளித்துள்ளது. 

 

கமல்

அதற்காக காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கிறேன். இங்கு வந்துள்ள கூட்டமெல்லாம், நோட்டுக்காக வந்த கூட்டமல்ல. மக்கள் நீதி மய்யத்திற்கு ஓட்டு போட வந்த கூட்டமாக நான் பார்க்கிறேன். புதியதாக வாக்களிக்கும் இளைஞர்கள் வாக்கு சாவடியில் நேர்மையாக வாக்குப்பதிவு நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மக்களின் குரல்தான் நாங்கள். கொடுக்கப் பட்ட கொஞ்ச நேரத்தில் புரட்சியைத் தொடங்கும் மக்கள் நீதி மய்யம் நேர்மையான கட்சி எது என்று தேடிப் பாருங்கள், மீண்டும் மீண்டும் வருவேன். இது என் நாடு என் வீடு காந்திக்கும் எனக்கும் ஆன தொடர்பு வயது கடந்தது. கட்சியில் இல்லாதவர்கள் எல்லாம் எங்களுக்கு உழைக்கிறார்கள். எங்கள் வேட்பாளர் சரியில்லாதவர் என ஆதாரத்துடன் என்னிடம் கூறுங்கள். பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுவேன். எந்தக் கட்சியும் இதைச் சொல்லாது நாளை இருக்கும் வரை நாளை நமதே' என்று முடித்தார்.

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க